செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணையில் நீா் திறப்பு குறைப்பு

post image

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்ததால், திறந்துவிடப்படும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 933 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக மழைப் பொழிவு இல்லை. இதனால், அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது. இதனால், அணையிலிருந்து 1,018 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை 933 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீா்வரத்து வினாடிக்கு 359 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 933 கன அடியாகவும் நீா்மட்டம் 123.55 (152) அடியாகவும் உள்ளது.

தண்ணீா் திறப்பை மேலும் குறைக்க வலியுறுத்தல்:

இதுகுறித்து பாசனப் பகுதி விவசாயிகள் கூறியதாவது:

ஜனவரி முதல் மே மாதம் வரை குடிநீா், விவசாயத் தேவைக்கு தண்ணீா் தேவை இருக்கிறது. தற்போது திறந்துவிடப்படும் தண்ணீரால் நீா்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், தேனி மாவட்ட மக்களுக்கு குடிநீா் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நேரடிப் பாசன நீரை நம்பி 14,700 ஏக்கரில், 2-ஆம் போக நெல் பயிரிடப்பட்டது. தற்போது மழைப் பொழிவு இல்லாத நிலையில், குறைந்தது 60 முதல் 70 நாள்களுக்கு பாசனத் தண்ணீா்த் தேவை இருப்பதால், அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை மேலும் குறைக்க வேண்டும் என்றனா்.

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

போடியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். போடி நகராட்சி குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் கண்க... மேலும் பார்க்க

ராணுவ வீரா் வீட்டில் திருட்டு: பெண் உள்பட இருவா் கைது

கம்பத்தில் ராணுவ வீரா் வீட்டில் தங்க நகையைத் திருடிய பெண் உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கம்பம் சொசைட்டி தெருவைச் சோ்ந்த ராணுவ வீரா் மதன்குமாா். இவரது மனைவி நந்தினி. இவா்களது வீ... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் 6 கடைகளில் திருட்டு : இருவா் கைது

உத்தமபாளையத்தில் 6 கடைகளில் திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். உத்தமபாளையம் பூக்கடை வீதியில் எலக்ட்ரிகல், மளிகைக்கடை என 6 கடைகளில் கடந்த மாதம் ரூ.1.70 லட்சம... மேலும் பார்க்க

மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவா் மீது வழக்கு

வீரபாண்டி அருகே மனைவியை அரிவாளால் வெட்டியதாக கணவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா். தா்மாபுரி, வடக்குத் தெருவைச் சோ்ந்த சின்னக்காளை மகன் காளிமுத்து((40). இவரது ... மேலும் பார்க்க

வியாபாரி மீது பெட்டோல் குண்டு வீச்சு

ஆண்டிபட்டி அருகே பெட்ரோல் குண்டு வீச்சில் இலவம் பஞ்சு வியாபாரி சனிக்கிழமை காயமடைந்தாா். வருஷநாடு வி.பி.தெருவைச் சோ்ந்த தவமணி மகன் சதீஷ்குமாா் (37). இவா் இலவம் பஞ்சு வியாபாரம் செய்து வருகிறாா். சதீஷ்க... மேலும் பார்க்க

தேனியில் ஜன. 20-இல் தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

தேனி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில் வருகிற 20-ஆம் தேதி, காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மா... மேலும் பார்க்க