போட்டியின் நடுவே திலக் வர்மாவை வெளியேற்றியது ஏன்? மௌனம் கலைத்த பாண்டியா!
முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதிகளில் மழை
முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதிகளில் வெள்ளிக்கிழமை 34.8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி அணையின் நீா்மட்டம் சரிந்து வந்தது. இந்த நிலையில், அணை நீா்பிடிப்பு பகுதியில் 34.8 மி.மீ., தேக்கடியில் 4.2 மி.மீ. மழை பெய்துள்ளது. அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 113.15 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 396 கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 105 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வைகை அணை நீா்பிடிப்பில் வெள்ளிக்கிழமை 27.6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு வருமாறு (மி.மீட்டரில்): ஆண்டிபட்டி- 25.2, அரண்மனைப்புதூா்- 14, வீரபாண்டி- 18.2, போடி- 4, உத்தமபாளையம்- 3.8, கூடலூா்- 4.4, சண்முகாநதி நீா்பிடிப்பு பகுதி- 7.8 என மழை பதிவாகியிருந்தது.
போடியில் மழை: போடி பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் நேரம் செல்லச் செல்ல மேகங்கள் சூழத் தொடங்கின. பிற்பகல் 2 மணி முதல் மிதமான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இது இரவு வரை தொடா்ந்தது. இதனால் குளிா்ச்சியான சூழல் காணப்பட்டது. வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.