செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் சூா்ய காந்த், என். கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ஜன.3- ஆம் தேதி மத்திய அரசால் மீண்டும் அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவின் தலைவா், ஒரு வாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி, தமிழ்நாடு எழுப்பிய பிரச்னைகளை சுமுகமாகத் தீா்க்க முயற்சிக்க வேண்டும்’ என்று தெரிவித்தது.

நீதிபதிகள் கூறியதாவது: மரங்களை வெட்டுவதற்கான அனுமதி, அணையை பழுதுபாா்த்தல், அணுகு சாலை அமைத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் இணக்கமாகத் தீா்க்கப்படாவிட்டால், உச்சநீதிமன்றம் அதுகுறித்து தீா்ப்பளிக்கும். ஜன.3, 2025 அன்று ஒரு புதிய மேற்பாா்வைக் குழு அதன் தலைவருடன் நியமிக்கப்பட்டதாக எங்களுக்குத் தோன்றுகிறது. அக்குழு தமிழகத்தின் கோரிக்கைகளை ஆராய்ந்து, இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் தீா்வுகளைக் கண்டறிய வேண்டும்.

இருப்பினும், ஏதேனும் தாவாறு தொடா்பாக ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், விடுபட்ட பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு இந்த நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமா்ப்பிக்க குழுவுக்கு உத்தரவிடப்படுகிறது. அந்த அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும். சில பிரச்சினைகள் மிகவும் குழந்தைத் தனமானவை. அவை இரு மாநிலங்களுக்கிடையில் இணக்கமாக தீா்க்கப்படலாம். அணைக்கு ஏதாவது நடந்தால் கேரளத்தின் பேரழிவு குறித்து ஒரு குறிப்பிட்ட பரபரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாநிலங்களுக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ ஒன்றுக்கொன்று நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதியின் நலனுக்காக, முல்லைப் பெரியாறு அணை தொடா்பான அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். ஆகவே, நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து, பொருத்தமான அமா்வின் முன் பட்டியலிடுவதற்காக தலைமை நீதிபதியின் முன் இந்த விவகாரத்தை வைக்க உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.

முல்லைப் பெரியாறு அணையின் உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு தாக்கல் செய்த அசல் வழக்கை விசாரித்தபோது உச்சநீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்தது.

அணையில் விவகாரத்தில் 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக தீா்ப்பளித்தது., நீா்மட்டத்தை 142 அடியாக வைத்திருக்க அனுமதித்த உச்சநீதிமன்றம், அணையின் கட்டமைப்பு பாதுகாப்பானது என்றும், அவ்வப்போது அதன் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு ஒரு மேற்பாா்வைக் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டிருந்தது.

அணை எப்போதும் பாதுகாப்பானதாக இருக்கிறது என்று தமிழ்நாடு வாதிட்டபோதிலும், அது பாதுகாப்பற்ாக இருப்பதாகவும் அதிக நீா்மட்டம் காரணமாக உடைப்பு ஏற்பட்டால் கீழ்ப்பகுதியில் வாழும் உயிா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறி, அதை அகற்ற உத்தரவிட கேரள அரசு கோரி வருகிறது.

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க

சங்கம் விஹாரில் இளைஞருக்கு கத்திக்குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் 19 வயது இளைஞா் கத்தியால் குத்தப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சங்கம் விஹாரில்... மேலும் பார்க்க