செய்திகள் :

மூன்றே நாளில் வழுக்கைத் தலை... அதிர்ச்சியில் கிராம மக்கள்; முடியுதிர்வுக்கு காரணம் என்ன?

post image

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் சில நபர்களுக்கு திடீரென கொத்துகொத்தாக முடி உதிர்ந்து வலுக்கை விழுந்ததால் கிராமவாசிகள் பீதியடைந்துள்ளனர்.

நீர் மாசுபாடு காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என ஆராய விசாரணையில் இறங்கியுள்ள அதிகாரிகள், இதற்காக உள்ளூர் நீர் ஆதாரங்களைப் பரிசோதித்து வருகின்றனர்.

இந்த மர்மமான நோய் பாதிப்பு வெளிச்சத்துக்கு வந்ததால் சுகாதாரத்துறையினர் இதன் பரவல் குறித்து அறிந்துகொள்ள கடந்த 7ம் தேதி கணக்கெடுப்பு நடத்தத் தொடங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி மருத்துவர் தீபாலி பஹேக்கர் கூறியுள்ளார்.

"நோயாளிகளுக்கு இருக்கக்கூடிய நோய் அறிகுறிகள் அடிப்படையில் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. தோல் நோய் நிபுணர்களின் ஆலோசனையையும் கருத்தில் கொண்டுள்ளோம்." என்கிறார் தீபாலி.

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என கிட்டத்தட்ட 150 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்னென்ன நோய் அறிகுறிகள்?

மூன்றே நாளில் வழுக்கை விழும் அளவு முடி உதிர்வதுடன், தலையில் அரிப்பும் ஏற்படுவதாக நோய்வாய்ப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நோயை உள்ளூர் மக்கள் வழுக்கை வைரஸ் என அழைக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள்

இதுகுறித்து மாவட்ட சுகாதார அதிகாரி அமோல் கீதே ஊடகங்களிடம் கூறுகையில், "பெரும்பாலான நோயாளிகளுக்கு தலையில் ஒருவகை பூஞ்சை தொற்று ஏற்பட்டதே முடி உதிர்ந்ததற்கு காரணம். எங்களுக்கு போதுமான தரவுகள் கிடைத்ததும், தோல் நிபுணர் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்களை மேல்மட்ட விசாரணைக்காக கிராமங்களுக்கு அனுப்புவோம்.

அந்த பகுதியில் உள்ள தண்ணீரில் கன உலோகங்கள் இருப்பு அதிகமாக இருக்கிறதா என்பதையும் விசாரித்து வருகிறோம். கன உலோகங்கள் அதிகமாக இருக்கும் தண்ணீரில் பூஞ்சைகள் எளிதாக பரவும். அப்படி பரவிய பூஞ்சையாலும் மக்களுக்கு முடி உதிர்வு ஏற்பட்டிருக்கலாம். நாங்கள் சில நோயாளிகளின் தோல் மாதிரியை சேமித்து அகோலா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பவிருக்கிறோம்" என்று இந்தியா டுடே வலைத்தளம் கூறுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றம்: ``ஜாமினில் வெளிவரமுடியாத தண்டனை'' - சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்!

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தொடரில் பெண்களுக்கு எதிரானக் குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 2025 குற்றவ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு' த.பெ.தி.க - நா.த.க இடையே மோதல்... போலீஸார் காயம்..!

கடலூர் மாவட்டம், வடலூரில் நேற்று முன் தினம் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்த சர்ச்சை கருத்துகளை தெரிவித்திருந்தார். அதற்கு, `பெரி... மேலும் பார்க்க

Doctor Vikatan: நட்ஸ் சாப்பிட்டால் நல்ல கொழுப்பு அதிகரிக்குமா...?

Doctor Vikatan: நட்ஸ் சாப்பிட்டால் உடலில் நல்ல கொழுப்பின்அளவு அதிகரிக்குமா... பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிட வேண்டுமா, தோல் நீக்கி சாப்பிடுவது சரியா? இதய நலனைப் பாதுகாக்க எண்ணெய் பயன்பாட்டை அறவே தவிர்... மேலும் பார்க்க

Food & Health: காய்ச்சல் இருக்கும்போது சாப்பிட வேண்டிய உணவுகள்!

காய்ச்சல் வந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். மருந்துகள் கொடுப்பதால் மட்டுமே காய்ச்சலை முற்றிலும் குணப்படுத்திவிட முடியாது. ‘காய்ச்சல் குணமாவதற்குத்தான் மருந்து சாப்பிட்டுவிட்டோ... மேலும் பார்க்க

TN Assembly: `அண்ணா பல்கலை. மாணவி வழக்கு' - கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதல்வரின் ஆவேச உரை!

2025-ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கி 3-வது நாளாக நடந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலை... மேலும் பார்க்க

Canada: ``டிரம்பின் அச்சுறுத்தலுக்கு கனடா பின்வாங்காது'' - ஜஸ்டின் ட்ருடோ சொல்ல காரணம் என்ன?

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, 2025 தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதாகவும், ஆளும் லிபரல் கட்சி லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் இருப்பதாகவும் நேற்று அறிவித்திருந்தார். அதைத் ... மேலும் பார்க்க