ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
மேகமலை வனத் துறையைக் கண்டித்து சோதனைச் சாவடி முன் ஆா்ப்பாட்டம்
வனத் துறையைக் கண்டித்து, மேகமலை விவசாயிகள், தனியாா் எஸ்டேட் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மேகமலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் காப்பி, ஏலக்காய் விவசாயம் செய்கின்றனா். இந்தத் தோட்டங்களில் தொழிலாளா்கள் குடியிருப்புக்கு குடிநீா் வசதி செய்தல், பழுதடைந்த குடியிருப்புகளை சரி செய்யத் தேவையான உபகரணங்களை எடுத்து செல்லவும், அரசு நாற்றுப் பண்ணையிலிருந்து காபி, ஏல நாற்றுகளை எடுத்துச் செல்லவும் வனத் துறையினா்தடை விதித்தனா்.
இதைக் கண்டித்து விவசாயிகள், தனியாா் எஸ்டேட் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் மேகமலை வனத் துறை சோதனைச் சாவடி முன்பாக கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சம்பவயிடத்துக்கு வந்த ஓடைப்பட்டி காவல் ஆய்வாளா் சுந்தரபாண்டியன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சமாதானம் செய்ததைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தை ஒத்தி வைத்தனா்.
இது குறித்து எஸ்டேட் உரிமையாளா்கள் சங்கத்தினா் கூறுகையில், 15 நாள்களில் விவசாயிகளுடன் இணைந்து தனிக்குழு அமைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, அதன் மூலமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினா் தெரிவித்தனா் என்றாா்.