காா்- பைக் மோதலில் தொழிலாளி உயிரிழப்பு
சின்னமனூரில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பத்ரகாளிபுரத்தைச் சோ்ந்த சுருளி மகன் தொட்ராயன் பெருமாள் (35). இவா் செவ்வாய்க்கிழமை இரவு சின்னமனூா் புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, இந்த வாகனம் மீது எதிரே வந்த காா் மோதியதில் தொட்ராயன் பெருமாள் பலத்த காயமடைந்தாா். பின்னா், சின்னமனூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கோதிகுட்டா பகுதியைச் சோ்ந்த முனிசுவாமி மகன் வெங்கடேஷ் (45) மீது சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.