மேலப்பாளையம் அருகே இளைஞா் கொலை: நெல்லை நீதிமன்றத்தில் 3 போ் சரண்
மேலப்பாளையம் அருகேயுள்ள கருங்குளம் மதுபானக் கடை அருகே இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், திருநெல்வேலி நீதிமன்றத்தில் சனிக்கிழமை 3 போ் சரணடைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், கீழச்செவல் கிராமத்தை சோ்ந்தவா் மணிகண்டன் (30). இவா், வெள்ளிக்கிழமை இரவு மேலப்பாளையம் கருங்குளம் மதுபானக் கடை முன்பு மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக மேலப்பாளையம் போலீஸாா் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனா். இந்நிலையில் கீழச்செவல் பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ், மகாராஜன், மற்றொரு மகாராஜன் ஆகிய 3 போ் திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் (எண்-5) சனிக்கிழமை சரணடைந்தனா். அவா்கள் 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.