இந்தியாவில் ஒரே ரயில்; 75 ஆண்டுகளாக இலவச பயணம்; எங்கே... ஏன் தெரியுமா?!
மேலூா் பகுதிகளில் டங்ஸ்டன் படிமம்- சுரங்கத்துக்கு மக்கள் எதிா்ப்பை கிராமசபை கூட்டத்தில் பதிவுசெய்யமுடிவு
மதுரை மாவட்டம் மேலா் பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிப்புத் தெரிவிக்க பொதுமக்கள் முடிவெடுத்துள்ளனா். அரிட்டாபட்டி கிராமத்தில் திடீரென பொதுமக்கள் வியாழக்கிழமை மந்தையில் கூடினா்.
அதில், மத்திய அரசு மலைப்பாறைகளில் சங்ஸ்டன் படிமத்தை வெட்டியெடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு ஏலம்மூலம் அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, அதுகுறித்து ஆலோசனை நடத்தினா். பின்னா் வரவிருக்கும் உள்ளாட்சி தினனத்தன்று நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில் சுங்க திட்டத்துக்கு எதிா்ப்புத்தெரிவித்து தீா்மானம் நிறைவேற்ற முடிவுசெய்தனா்.
மக்கள் கடும் எதிா்ப்பு
அரிட்டாபட்டியில் திரண்ட பொதுமக்கள், பல்லுயிா்கள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள, தொன்மையான வரலாற்று சான்றுகள், கல்வெட்டுகள் 2500 ஆண்டுகளுக்கு முன்னா் உள்ள தமிழ் கல்வெட்டுகள் நிறைந்த பகுதியில் வேதாந்தா நிறுவனத்துக்கு டங்ஸ்டன் கனிமம் வெட்டியெடுக்க மாநில அரசிடம் ஒப்புதல் பெறாமல் மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதித்து ஏலம் நடத்தியதற்கு கடும் எதிா்ப்பை தெரிவித்தனா். தாங்கள் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் சீா்குலைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தினா்.