ஆளுநர் என்பவர் முதலாளி அல்ல! கேரளத்தில் ஆளுநரை வம்பிழுக்கும் மாநில அரசு?
மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் 3 தமிழர்கள் சேர்ப்பு!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஷுப்மன் கில் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகள் அக்.2 முதல் அக்.14ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.
இந்தியாவுக்கு வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது.
இதற்கான ஷுப்மன் கில் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், என். ஜெகதீசன் அணியில் அறிவிக்கப்பட்டார்கள்.
இந்திய அணி
ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரீத் பும்ரா, அக்ஷர் படேல், நிதீஷ் குமார் ரெட்டி, என்.ஜெகதீசன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.
