மும்பையில் புல்லட் ரயில் நிலையம்: ‘வேகமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள்’
மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் விலை அதிரடி உயர்வு! கேம் பிரியர்கள் அதிர்ச்சி
உலகளவில் விடியோ கேம் பிரியர்கள் அதிகம் பயன்படுத்தி வரும் எக்ஸ்பாக்ஸ் விலையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.
எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ், எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் ஆகியவற்றின் விலை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் எஸ் ரகத்தின் விலை 80 டாலர்கள் உயர்ந்துள்ளது. விலையேற்றத்தைத் தொடர்ந்து 379.99 டாலருக்கு எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் எஸ் விற்பனையாகிறது.அதற்கு அடுத்த மேம்பட்ட ரகமான எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் 100 டாலர் விலை உயர்த்தப்பட்டு 599.99 டாலருக்கு விற்கப்படுகிறது.
எக்ஸ் பாக்ஸ் மட்டுமில்லாது அவற்றுடன் வாங்கப்படும் ஹெட்செட்கள், வயர்லெஸ் கண்ட்ரோலர்கள் உள்ளிட்ட பிற சாதனங்களின் விலையும் ஏற்றத்தைக் கண்டுள்ளன.
இந்த அதிரடி விலையேற்றத்துக்கு முக்கிய காரணமாக அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையே சுட்டிக்காட்டப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு தாக்கத்தால், மைக்ரோசாஃப்ட் மட்டுமில்லாது சோனி நிறுவனமும் அண்மையில் தங்களது தயாரிப்பான ப்ளேஸ்டேசன் 5-இன் விலை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, நிடேண்டோ நிறுவனத்தின் ஸ்விட்ச் 2-இன் விலையும் ஏற்றத்தை கண்டுள்ளது.