செய்திகள் :

மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு!

post image

கர்நாடக மாநிலம் மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மைசூர் விஸ்வேஸ்வரய்யா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வசிக்கும் தொழிலதிபர் சேத்தன் (வயது 45), அவரது மனைவி ரூபாலி (43), தாய் பிரியம்வதா (62) மற்றும் மகன் குஷால் (15) ஆகியோர் திங்கள்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : கேரளத்தில் கத்தி முனையில் வங்கிக் கொள்ளை: கைதான நபர் அளித்த வாக்குமூலம்

சேத்தன், ரூபாலி மற்றும் குஷால் ஒரு வீட்டிலும், பிரியம்வதா அதே குடியிருப்பில் மற்றொரு வீட்டிலும் உயிரிழந்து கிடந்துள்ளனர். மூவருக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, சேத்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு விரைந்த மைசூரு காவல் கண்காணிப்பாளர் சீமா லட்கர் விசாரணை நடத்தி வருகிறார்.

முதல்கட்ட விசாரணையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தான் தற்கொலை செய்துகொள்ளவுள்ளதாக உறவினர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் சேத்தன் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அதனை திங்கள்கிழமை அதிகாலை பார்த்த உறவினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக கடன் காரணமாக சேத்தன் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்புள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், சேத்தன் செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர் குறுஞ்செய்தி உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

நான்கு பேரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க

நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?

பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க

சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு!

சம்பாஜி மகாராஜா குறித்த ஆட்சேபணைக்குரிய தகவலை நீக்காமல் வைத்திருந்ததற்காக விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக... மேலும் பார்க்க

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க