செய்திகள் :

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வைரம் மற்றும் தங்க துறை 8.5% பங்களிக்கும்: அவினாஷ் குப்தா

post image

புதுதில்லி : இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வைரம் மற்றும் தங்கம் ஏற்கனவே 7.5% பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இது 8.5% எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் ஜெம் அண்டு ஜூவல்லரி கவுன்சில் துணைத் தலைவரான அவினாஷ் குப்தா.

வட இந்தியாவின் நகை வர்த்தகத்திற்கான முக்கிய மையமாக தில்லி உருவெடுத்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள நகை வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனிடையில் பிரதமரின் விக்ஸித் பாரத் உடன் ஒத்துப்போகும் வகையில், வைரம் மற்றும் தங்க தொழில் செல்வத்தை வளர்க்கும் என்றனர்.

தில்லி ஜுவல்லரி & ஜெம் ஃபேர் சிக்னேச்சரின் முதல் பதிப்பு பாரத் மண்டபத்தில் தொடங்கியது. இந்த நிகழ்வில், சுமார் 120 பிரீமியம் கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர். 2035ல் இந்த துறையில் 225 முதல் 245 பில்லியன் டாலர் மதிப்பீடு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் முன்னணி பிசினஸ்-டு-பிசினஸ் நிகழ்வு ஏற்பாட்டாளரான இன்ஃபார்மா மார்க்கெட்ஸ், இந்தியாவில் கண்காட்சியாளர்கள் தங்கள் சமீபத்திய வடிவமைப்புகளை வெளியிடவும், பிரீமியம் பிரிவில் பிராண்ட் நிலைப்பாட்டை வலுப்படுத்தவும், நகைத் துறையில் முக்கிய பங்குதாரர்களுடன் ஈடுபடவும் ஒரு முக்கிய தளத்தை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தது.

இந்தியாவின் மிகச்சிறந்த நகை கைவினைத்திறனை எடுத்துக்காட்டும் இந்த மூன்று நாள் நிகழ்வானது, சுமார் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8,000க்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: இணைய வழியில் புதிய சேமிப்புக் கணக்கு: ஐஓபி அறிமுகம்

கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி!

புதுதில்லி: ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததைத் தொடர்ந்து, பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி வியாழக்கிழமை (பிப்ரவரி 20) வீடு மற்றும் வாகன கடன்கள் உள்ளிட்ட சில்லறை கடன்களுக்கான வட்டி வ... மேலும் பார்க்க

ரூ.1.90 லட்சம் விலை குறைந்த இத்தாலிய பைக்

இத்தாலிய நிறுவனமான மோட்டோ மொரினியின் சேயேமெஸோ பைக்கின் விலை இந்தியச் சந்தையில் ரூ.1.90 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது.இது குறித்து சந்தை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:இந்தியாவில் விற்பனையாகும் மோட்டோ மோரினோ... மேலும் பார்க்க

2024 -ஆம் ஆண்டு தரவுத் தொகுப்புகள் பதிவேடுகள்: தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டது

நமது சிறப்பு நிருபா் நாட்டின் பல்வேறு தகவல்களை அளிக்கும் 2024 - தரவுத்தொகுப்புகள், பதிவேடுகளின் தொகுப்பின் புதிய பதிப்பை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த தர... மேலும் பார்க்க

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,572 கோடி டாலராக சரிவு

கடந்த 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 63,572.1 கோடி டாலராகக் குறைந்துள்ளது.இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:பிப். 14... மேலும் பார்க்க

மார்ச் 28 முதல் நிஃப்டியில் நுழையும் ஜியோ பைனான்சியல், சோமேட்டோ!

புதுதில்லி: ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் ஜொமாட்டோ லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வரும் மார்ச் 28 முதல் தேசிய பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் நிஃப்டி 50 குறியீட்டில் நுழைய உள்ளது.பாரத் பெட்ரோல... மேலும் பார்க்க

இந்திய ஜவுளி ஏற்றுமதி 14% அதிகரிப்பு

இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 13.88 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி மா... மேலும் பார்க்க