செய்திகள் :

``யாருக்கு மாதவிடாய்?'' - உள்ளாடையை கழற்றி சோதனை செய்த ஆசிரியர்கள்; பள்ளி முதல்வர் கைது..

post image

மும்பை அருகில் உள்ள தானே ஷாப்பூரில் ஆர்.எஸ்.தமானி என்ற பள்ளி செயல்படுகிறது. இங்குள்ள பாத்ரூம்பில் ரத்தக்கரை இருப்பதை துப்புரவு தொழிலாளி பார்த்து அதனை பள்ளி முதல்வரிடம் தெரிவித்தார்.

இதனால் 5-வது முதல் 10-வது வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் பாத்ரூம் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்தினர். யாருக்கு மாதவிடாய் வந்திருக்கிறது என்று கேட்டனர். அதோடு இதில் திருப்தியடையாத ஆசிரியர்கள் மாணவிகளிடம் உள்ளாடையை கழற்றி சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் புகார் செய்தனர். அதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெற்றோர் கூறுகையில், ''மாதவிடாய் குறித்து மாணவிகளுக்கு சரியான கல்வி கற்றுக்கொடுப்பதற்கு பதில் பள்ளி முதல்வர் மாணவிகளுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறார். இது வெட்கக்கேடான, ஜீரணிக்க முடியாத ஒரு செயல் ஆகும். இச்சம்பவத்திற்காக பள்ளி முதல்வர் மீது வழக்கு பதிவு அவரை கைது செய்யவேண்டும்'' என்றார்.

பெற்றோரின் போராட்டத்தை தொடர்ந்து போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். பள்ளி முதல்வர் மீது பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் இது தொடர்பாக பள்ளி முதல்வர், பள்ளி அறங்காவலர்கள் 2 பேர், 4 ஆசிரியர்கள், ஒரு பியூன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு பியூன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார். போலீஸாரின் விசாரணையில் பள்ளி முதல்வர் மாணவிகளை ஹாலுக்கு வரவழைத்து விசாரணை நடத்தி இருக்கிறார். அதோடு பெண் பியூனை கொண்டு 12 மாணவிகளிடம் ஆடைகளை கழற்றி மாதவிடாய் குறித்து சோதனை செய்ததாக தெரிய வந்துள்ளது.

மாதவிடாய்

இதில் ஒரு மாணவி தனக்கு மாதவிடாய் இல்லை என்று சொல்லி இருக்கிறார். ஆனால் சோதனையில் அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் சக மாணவிகள் முன்னிலையில் அம்மாணவியை முதல்வர் திட்டி இருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து தங்களது பெற்றோரிடம் புகார் செய்தனர். பள்ளி முதல்வரின் இச்செயல் பெற்றோரை கொந்தளிப்பு அடைய செய்துள்ளது.

``பாலியல் கொடுமை, கொலை செய்தேன்; அமானுஷ்ய உணர்வு மிரட்டுகிறது..'' - சரணடைந்த கொலைகாரன் வாக்குமூலம்

கர்நாடக மாநிலத்தில் சுமார் 16 ஆண்டுகளாகப் பலப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து எரித்துப் புதைத்ததாக காவல் நிலையத்தில் ஒருவர் சரண்டர் ஆகியிருக்கிறார்.சில தினங்களுக்கு முன்பு தட்சிண கன்னட ... மேலும் பார்க்க

Hema Committee: ``நடிகைகள் வாக்குமூலம் அளிக்கவில்லை; - வழக்குகள் முடிந்தது'' -கேரள அரசு சொல்வதென்ன?

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் கொச்சியில் வைத்து காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பத... மேலும் பார்க்க

+1 மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ-வில் கைது.. அதிர்ச்சி பின்னணி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (56). இவர் திருவாரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், தனது வீட்டில் டியூசன் வகுப... மேலும் பார்க்க

விழுப்புரம்: கோயிலுக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; போலி சாமியாருக்கு 7 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் பகுதியில் இருக்கும் கோயிலுக்கு கடந்த 2023-ம் ஆண்டு சென்ற பெண் ஒருவர், உடன் தன்னுடைய ஒன்பது வயது மகளையும் அழைத்துச் சென்றிருக்கிறார். அதேபோல விழுப்புரம், அண்ணாநகர்ப் பகு... மேலும் பார்க்க