குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
யாருடன் கூட்டணி? விரைவில் முடிவு: மார்க்சிய கம்யூனிஸ்ட்
அரசியல் நிலைபாடு, கூட்டணி குறித்து விரைவில் முடிவு செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள நேதாஜி சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் சண்முகம் பேசியதாவது:
”டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த அரசாணையை மத்திய அரசு வெளியிட வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போதும்போல டங்ஸ்டன் விவகாரத்தில் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்.
திருப்பரங்குன்றம் மலைக்கோயில் பிரச்னையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த விவகாரத்தில் மதப் பிரச்னை வராத அளவுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் சார்ந்த பிரச்னைகளில் விஜய் கவனம் செலுத்துவதில் நாங்கள் வரவேற்கிறோம். இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு, சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து எப்ரல் 6 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் 24 வது அகில இந்திய மாநாட்டில் முடிவு செய்வோம்.
3 ஆண்டுகளுக்கு முன்பு, கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற 23 வது அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொடர்ந்து வருகிறோம்.
திமுகவின் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கவில்லை, எதிர்க்க வேண்டியதை எதிர்க்கிறோம், வரவேற்க வேண்டியதே வரவேற்கிறோம்" எனத் தெரிவித்தார்.