Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் ...
யார் அந்த சார்? எஃப்ஐஆர் வெளியானதற்கு யார் காரணம்? முதல்வர் பதிலுரை
சென்னை: யார் அந்த சார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலுரையாற்றி வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரை உச்சரித்து, பல்கலைக்கும், அண்ணாவின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட சிறப்புப் விசாரணைக் குழுதான் விசாரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்துள்ளது மாபெரும் கொடூரம்.இதனை யாராலும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து எம்எல்ஏக்கள் பேசியிருக்கிறீர்கள். இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று, நியாயம் பெற்றுத் தருவதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை இங்கே தெளிவுபடுத்திக்கொள்கிறோம்.
பாலியல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானதுக்கு தமிழக அரசு காரணமில்லை. மத்திய அரசின் கீழ் இருக்கும் துறைதான் காரணம். தொழில்நுட்பக் கோளாறு இருப்பதைக் கண்டுபிடித்து காவல்துறைதான், உடனடியாக மத்திய அரசின் துறைக்குத் தெரிவித்து தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது.
எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அவ்வப்போது யார் அந்த சார் என்று கேட்கிறீர்கள். உங்களிடம் யார் அந்த சார் என்பது குறித்து ஆதாரம் இருந்தால் உடனடியாக உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவிடம் அதனை அளிக்கலாம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் சரியாக இல்லை என்று எப்படி கூற முடியும். குற்றவாளி யாராக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.