செய்திகள் :

`யார், யாரிடம் இடங்களை அபகரித்தார்?' - என்கவுன்ட்டரில் உயிரிழந்த ரௌடி சீசிங்ராஜா வீடுகளில் ரெய்டு

post image

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சீசிங் ராஜா, சென்னை கிழக்கு தாம்பரத்தில் வசித்து வந்தார். நில விவகாரம் தொடர்பான கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு வந்த சீசிங்ராஜா மீது 6 கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 39  வழக்குகள் பதிவாகின. பிரபல ரௌடியாக வலம் வந்த சீசிங்ராஜாவை போலீஸார் ஏழு தடவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்ட ரௌடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். நிலவிவகாரத்தில் தொடர்புடைய சீசிங்ராஜா யார், யாரிடம் இடங்களை அபகரித்தார் என்று விசாரணை நடத்த தாம்பரம் போலீஸார் முடிவு செய்தனர். அது தொடர்பாக வருவாய் துறையினரிடமும் போலீஸார் ஆலோசனை நடத்தினர்.

சோதனை நடந்த வீடு

இதையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் உதவி கமிஷனர்கள், 14 இனஸ்பெக்டர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீஸார் இன்று (19.11.2024) அதிரடியாக வருவாய்துறையினருடன் சேர்ந்து சீசிங் ராஜா மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் அடுத்த ராமகிருஷ்ணாபுத்தில் உள்ள சீசிங் ராஜா வீட்டில் உதவி கமிஷனர் வைஷ்ணவி தலைமையில் போலீஸார் சோதனை நடத்தினர். இதைப்போல சேலையூர், மப்பேடு, கஸ்பாபுரம், மாடம்பாக்கம் உள்ளிட்ட 14 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையில் சிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Whatsapp : வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை பகிர்ந்த மெட்டா; ரூ.213 கோடி அபராதம் விதித்த CCI ஆணையம்!

உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல தளங்களை இயக்கி வருகிறது. இதில் பாமர மக்கள் வரை சென்ற தளம்தான் வாட்ஸ்அப். இலவச வீடியோ, ஆடியோ கால், இளைஞர்களை கவரும் வகை... மேலும் பார்க்க

`ஒரு கொலை இல்லை... இரண்டு கொலை’ - கோவை போலீஸை அதிரவைத்த வாக்குமூலம்

கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். விசைத்தறி நெசவு தொழிலாளியாக இருந்தார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இள... மேலும் பார்க்க

சென்னை: பெண் இன்ஜினீயர் கொடுத்த பாலியல் புகார் - பாடகர் குருகுகன் சிக்கியது எப்படி?

சென்னையைச் சேர்ந்த பெண் இன்ஜினீயர் ஒருவர், கடந்த 25.10.2024-ம் தேதி பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார் . அதில் கூறியிருப்பதாவது, ``சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

போலி பணி ஆணை; ரூ.99 லட்சம் மோசடி... கைதான ஊராட்சி மன்றத் தலைவி - காங்கிரஸில் சலசலப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே அமைந்துள்ளது கொல்லஞ்சி ஊராட்சி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சலோமி இந்த ஊராட்சி மன்ற தலைவியாக இருந்துவருகிறார். இவர் மகிளா காங்கிரஸ் நிர்வாகியாகவும் உள்ளார். மா... மேலும் பார்க்க

வேலூரில் பிடிபட்ட யானை தந்தம் - பாஜக நிர்வாகி உட்பட 9 பேரிடம் வனத்துறை தீவிர விசாரணை

வேலூர் அடுத்துள்ள அரியூர் மலைக்கோடியைச் சேர்ந்தவர் சம்பத் (56). இவரின் வீட்டில் யானை தந்தம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனம் மற்றும் வனஉயிரின குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் அமைச்சர் மீது கல்வீச்சு தாக்குதல்; தலையில் ரத்தக்காயம்.. என்ன நடந்தது?

இறுதி கட்ட தேர்தல் பிரசாரம்...மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியில் இருக்கிறார். இம்முறை சட்டமன்ற தேர்தலில் தனது மகன் சலீல் தேஷ்முக்கை கடோல் தொக... மேலும் பார்க்க