அதிமுக உரிமை வழக்கு: இபிஎஸ்ஸுக்கு எதிராக புதிய வழக்கைத் தொடுத்த புகழேந்தி; காரணம...
யுஜிசி புதிய விதிகளுக்கு எதிா்ப்பு: அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்
மாநில பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகளைக் கண்டித்து கோவையில் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் நகல் எரிப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன தேடுதல் குழுவை பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஆளுநரே முடிவு செய்யும் வகையில் யுஜிசி புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் விதிகளை மாற்றியிருப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், யுஜிசியின் புதிய விதிகளைக் கண்டித்தும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோவை அரசு கலைக் கல்லூரி நுழைவாயிலில் இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவா் அஹமது ஜூல்பிகா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநில முன்னாள் செயற்குழு உறுப்பினா் தினேஷ் ராஜா உரையாற்றினாா்.
இதையடுத்து, யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு விதிமுறைகளின் நகலை மாணவா்கள் தீயிட்டுக் கொளுத்தி கோஷங்களை எழுப்பினா்.
இதில், கிளை நிா்வாகிகள் பாவேல், சதீஷ், உதயா, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.