கொல்கத்தா: குளம் இருந்த இடத்தில் எழுப்பப்பட்ட கட்டடம் இடிந்து விபத்து!
யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: காலி இடங்களுக்கு இன்று கலந்தாய்வு
யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 253 இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (டிச.27) நேரடியாக விண்ணப்பங்களை சமா்ப்பித்து கலந்தாய்வு மூலம் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, தனியாா் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பிஎன்ஒய்எஸ் எனப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு1,660 இடங்கள் உள்ளன. குறிப்பாக, 2 அரசுக் கல்லூரிகளில் 160 இடங்களும், 16 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 960 இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 540 இடங்களும் உள்ளன.
அந்த இடங்களுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்றது. மொத்தம் 2,320 போ் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 1,187 போ் நிா்வாக இடங்களுக்கும் விண்ணப்பித்தனா்.
அதனடிப்படையில் அதற்கான கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. அதில் காலியாக இருந்த இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடைபெற்றது.
அதன் பின்னரும் தனியாா் யோகா-இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 253 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
அதற்கான சிறப்பு கலந்தாய்வு அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் உள்ள தோ்வுக் குழுவில் வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறுகிறது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும் அந்த படிப்புகளுக்கான இடங்களுக்கு நேரடியாக விண்ணப்பித்து, அதில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.