செய்திகள் :

ரஜினி - 50: மறுவெளியீடாகும் படையப்பா!

post image

நடிகர் ரஜினிகாந்த்தின் படையப்பா திரைப்படம் மறுவெளியீடாக உள்ளது.

90களில் பாட்ஷா, அண்ணாமலை படங்கள் பெற்ற வெற்றிகளையும் அதனால் உச்சிக்குச் சென்ற ரஜினியின் புகழையும் கட்டிக்காத்த மற்றொரு ரஜினி படம் - படையப்பா. வெற்றி என்றால் அப்படியொரு வெற்றி.

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 கோடைக்காலத்தில் வெளியான படையப்பாவைக் கண்டுகளிக்காத தமிழ் சினிமா ரசிகரே இருந்திருக்க முடியாது என்கிற அளவுக்கு திரையரங்குகளில் ஏப்ரல், மே முழுக்க கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து ரசித்தார்கள்.

இந்தளவுக்கு இளைஞர்கள், தாய்மார்கள் என அனைவரையும் கவர்ந்த இன்னொரு ரஜினி படம் அதற்குப் பிறகு வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

வாயில் மவுத் ஆர்கன், கையில் காப்பு என படத்தின் முதல் பாதியில் துறுதுறுவென இருப்பார் ரஜினி. இளைஞர்களுக்குப் பிடித்தது போல இருக்கவேண்டும் என்பதால் முதல் பாதியில் உடை, ஸ்டைல் எல்லாம் அதற்கேற்றாற்போல இருக்கும்.

இதையும் படிக்க: லைகாவால் கேம் சேஞ்சருக்கு சிக்கல்?

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் பஞ்ச்லைன்களை எழுதும் பொறுப்பையும் ரஜினியே எடுத்துக்கொண்டார். போடா, ஆண்டவனே நம்ம பக்கம்தான் இருக்கான், அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை என்கிற வசனங்களை எழுதியவர் ரஜினிதான்.

கடந்த காலங்களில் வெற்றிபெற்ற திரைப்படங்களை மறுவெளியீடு செய்யும் டிரெண்ட்டில் கில்லி, பில்லா உள்ளிட்ட பல படங்கள் மறுவெளியீடாகின. இதில், கில்லி திரைப்படம் மறுவெளியீட்டிலும் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமாகி இந்தாண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதால் படையப்பா திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய அப்படத்தின் தயாரிப்பாளரான தேனப்பன் முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக நடிகர் ரஜினிகாந்த்திடம் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

மம்மூட்டி - கௌதம் மேனன் படத்தின் டிரைலர்!

மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள மடோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில... மேலும் பார்க்க

டிராகன் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்: பிரதீப் ரங்கநாதன்

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படத்தின் 2ஆவது பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. இயக்குநராக மட்டுமல்லாது கதாநாயகனாகவும் முத்திரைப் பதித்துள்ள பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அடுத்ததாக நடித்து வ... மேலும் பார்க்க

இந்திரா காந்தி பலவீனமானவர்..! கங்கனா ரணாவத் பேட்டி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மிகவும் பலவீனமானவரென நடிகையும் எமர்ஜென்சி படத்தின் இயக்குநருமான கங்கனா ரணாவத் பேட்டியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975இல் பிரகடனப்படுத்திய 21 மாதங்கள் ... மேலும் பார்க்க

நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகார்: தொழிலதிபர் கைது!

கொச்சி : மலையாள நடிகை ஹனி ரோஸ் அளித்துள்ள பாலியல் புகாரரின் அடிப்படையில் தொழிலதிபர் பாபி செம்மானூர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.தன்னைக் குறிவைத்து... மேலும் பார்க்க

நேசிப்பாயா பாடல் உருவானது எப்படி? படக்குழு வெளியிட்ட விடியோ!

நேசிப்பாயா படத்தின் தலைப்பு பாடல் அறிவிப்பை குறித்து படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’ எனப... மேலும் பார்க்க

சூர்யா - ஆர். ஜே. பாலாஜி படத்தின் பெயர் இதுவா?

சூர்யா - 45 படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில், த்ரிஷ... மேலும் பார்க்க