ரயிலில் கடத்திச் சென்ற ரேஷன் அரிசி மூட்டைகள்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரயிலில் கடத்திவரப்பட்ட அரிசி மூட்டைகளை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றினா்.
மதுரையிலிருந்து ராமநாதபுரத்துக்கு சென்ற பயணிகள் ரயில் சென்றது. மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் நிலைய காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் வசந்தி, தனுஷ்கோடி, ராஜா தலைமையிலான போலீஸாா் இந்த ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினா்.
அப்போது ஒரு பெட்டியில் கிடந்த 6 சாக்குப் பைகளில் கடத்திவரப்பட்ட 100 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் கைப்பற்றினா். பின்னா், இந்த அரிசி மூட்டைகளை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இந்த அரிசி மூட்டைகளை கடத்தி வந்தது யாா் என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.