செய்திகள் :

ரயில் தண்டவாளத்தில் தண்டால்; சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட வீடியோ- இளைஞரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

post image

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே தாமரை குட்டி விளை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 90 கிலோ உடல் எடை கொண்ட கண்ணன், தனது எடையை விட 4 மடங்கு எடை கொண்ட 370 கிலோ காரை, யோக் வாக் என்ற முறைப்படி 25 மீட்டர் தூக்கி நடந்து சென்று உலக சாதனை படைத்துள்ளார். தமிழக இரும்பு மனிதன் என்ற பட்டத்தைப் பெற்ற கண்ணன், பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் நடைபெற்ற உலக இரும்பு மனிதன் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட இவர், 85 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இதையடுத்து இந்தியா இரும்பு மனிதன் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு பல்வேறு பளு தூக்கும் நிகழ்சிக்களை நடத்தி வருகிறார். அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கிச் செல்வது, லாரியை கட்டி இழுப்பது என அசாதாரணமான செயல்களை செய்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார். இரண்டு இருசக்கர வாகனங்களை தூக்கிச் செல்வது, நான்கு நபர்களை ஒரே சமயத்தில் தூக்கிச் சுமந்து செல்வது என பல்வேறு செயல்களை செய்துள்ளார்.

இரும்பு மனிதர் கண்ணன்

உடற்பயிற்சி, பாடி பில்டிங் போன்றவற்றில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இவரது 'கண்ணன் ஸ்ட்ராங்மேன் இந்தியா' என்ற முகநூல் பக்கத்தை பின் தொடர்ந்து அவரது வீடியோக்களை பார்ப்பதுடன் பகிர்ந்தும் வருகின்றனர். சில தினங்களுக்கு முன் கண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அதில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தனது நண்பர் ஒருவருடன், தண்டவாளத்தில் தண்டால் பயிற்சி எடுத்துக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ரயில் தண்டவாளத்தில் தண்டால் எடுப்பது ஆபத்தான செயல் எனவும், ஆபத்தை உணராமல் அவரது செயல் உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

நாகர்கோவில் ஜங்சன் ரயில் நிலையத்தில் தண்டால் எடுத்த கண்ண

ரயில் நிலையத்தில், எதிர்புறம் உள்ள நடைமேடைக்கு கடந்து செல்ல தண்டவாளத்தின் குறுக்கே நடந்து சென்றாலே ரயில்வே போலீஸார் அபராதம் விதிப்பார்கள். அதுமட்டும் அல்லாது ரயில் நிலையங்களிலும், ரயில் தண்டவாளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடியோ எடுத்து ரீல்ஸ் போடுவது சட்டப்படி தவறானது என ரயில்வே துறை எச்சரித்தும் வருகிறது. இந்த நிலையில் இரும்புமனிதன் கண்ணனின் வீடியோவின் அடிப்படையில் அவரை நாகர்கோவில் ரயில்வே போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து கண்ணன் கூறுகையில், "ரயில்வே போலீஸார் என்னை அழைத்து, தண்டவாளத்தில் தண்டால் எடுத்தது தவறான செயல் எனத் தெரிவித்து விட்டுவிட்டனர்" என்றார்.

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க