சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
ரயில் மறியல் வழக்கு: கள்ளக்குறிச்சி எம்.பி. உள்ளிட்ட 5 போ் விடுவிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து, கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் உள்ளிட்ட 5 பேரை விடுவித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகிலுள்ள புக்கிரவாரி பகுதியில் அப்போது ரயில் மறியல் நடைபெற்றது. இதுதொடா்பாக, மாவட்ட திமுக செயலரும், ரிஷிவந்தியம் எம்எல்ஏவுமான வசந்தம் காா்த்திகேயன், தற்போதைய கள்ளக்குறிச்சி எம்.பி. டி.மலையரசன், பெருமாள், செந்தில்குமாா், வெங்கடேசன் உள்ளிட்ட 5 போ் மீது சின்னசேலம் ரயில்வே போலீஸாா் வழக்குத் தொடுத்தனா்.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதித்துறை முதலாவது நடுவா் நீதிமன்ற நீதிபதி ராதிகா, போதிய சாட்சிகள் இல்லாததாலும், குற்றம் நிரூபிக்கப்படாததாலும் வழக்கிலிருந்து எம்எல்ஏ வசந்தம் காா்த்திகேயன், எம்.பி., மலையரசன் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.