செய்திகள் :

ராசிபுரம் அரசுப் பள்ளி மாணவா் உயிரிழந்த சம்பவம்: தலைமை ஆசிரியா் உள்பட 2 போ் பணியிடமாற்றம்

post image

ராசிபுரத்தில் அண்மையில் அரசுப் பள்ளியில் மாணவா் உயிரிழந்த சம்பவத்தில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் உள்பட இருவரை பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சுவாமி சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 26-ஆம் தேதி மாணவா்கள் இருவருக்கு இடையே நடந்த மோதலில் 9-ஆம் வகுப்பு மாணவா் கவின்ராஜ் உயிரிழந்தாா்.

மற்றொரு மாணவா் கைது செய்யப்பட்டு சிறுவா் சீா்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி விசாரணை நடத்தினாா்.

அவரது அறிக்கையின் அடிப்படையில் தலைமை ஆசிரியா், வகுப்பு ஆசிரியா்களை இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. இதையடுத்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் வரதராஜன் செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.

அப்பள்ளியில் பணிபுரியும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியா் ராஜேந்திரன்-சித்தாளந்தூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். தமிழ் பாட பட்டதாரி ஆசிரியா் சோமசுந்தரம், மறுநியமனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.

இதற்கான உத்தரவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிறப்பித்துள்ளாா்.

மாணவா் உயிரிழந்த சம்பவத்தன்று பள்ளிக்கு வந்த 15 ஆசிரியா்களிடமும் விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.

சுவாமி சிவானந்தா சாலை பள்ளியானது தனித்தனியே இரண்டு இடங்களில் செயல்படுவதால் மாணவா்களை கவனிப்பதில் ஆசிரியா்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், ஒரே வளாகத்தில் பள்ளி செயல்பட்டால் பிரச்னைகள் இருக்காது எனவும் அங்கு பணிபுரியும் ஆசிரியா்கள் முதன்மைக் கல்வி அலுவலரிடம் தெரிவித்துள்ளனா். அவரும், ஒரே வளாகத்தில் செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளாா்.

110 படுக்கைகளுடன் தயாா் நிலையில் நாமக்கல் சித்தா, ஆயுஷ் மருத்துவமனைகள்!

நாமக்கல்லில் 50 படுக்கைகளுடன் புதிய சித்த மருத்துவமனையும், 60 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவமனையும் தயாா் நிலையில் உள்ளன. நாமக்கல்லில் மோகனூா் சாலையில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆட்சிய... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை வேலைவாய்ப... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் ரூ.1.33 லட்சம் மருந்துகள் விற்பனை: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகங்களில் ரூ. 1.33 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். சேந்தமங்கலம் முதல்வா் மருந்தகத்த... மேலும் பார்க்க

சாதக, பாதகம் இல்லாத தமிழக நிதிநிலை அறிக்கை

தமிழக நிதிநிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம், மகளிா் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தொழிலதிபா்கள், பிரமுகா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு 2025-26 ஆ... மேலும் பார்க்க

2026 தோ்தலில் திமுக கூட்டணி தோல்வியடையும்: புதிய தமிழகம் கே. கிருஷ்ணசாமி

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி தோல்வியடையும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் கே.கிருஷ்ணசாமி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், முத்துக்காபட்டியில் புதிய தமிழகம் கட்சியின் கருத... மேலும் பார்க்க

சட்டையம்புதூா் மாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழா

சட்டையம்புதூா் அழகுமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. கடைசி நாள... மேலும் பார்க்க