செய்திகள் :

`ராஜ்ய சபா சீட்: வாய்த்துடுக்கு மன்னரா, மாஜி காக்கியா? டு வேதனையில் சூரியக் கட்சியினர்’ | கழுகார்

post image

தமிழக காவல்துறையின் உச்சப் பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரியின் பதவிக்காலம், விரைவிலேயே முடியப்போகிறது. அந்த அதிகாரியின் பிறந்த தேதி அடிப்படையில் பார்த்தால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வுபெறவிருக்கிறார். ஆனால், அவர் தற்போதிருக்கும் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் அடிப்படையில் கணக்கிட்டால், ஜூன் மாதத்தோடு அவரை விருப்ப ஓய்வில் செல்ல அனுமதிக்கலாம். ஆனால், தங்களோடு மிகவும் நெருக்கமாக இருப்பதால், அவருக்குப் பணி நீட்டிப்பு கொடுக்கலாமா என ஆலோசித்துவருகிறதாம் ஆட்சி மேலிடம். அதன்படி, முதல் மூன்று மாதங்கள் தமிழக அரசும், அடுத்த மூன்று மாதங்கள் மத்திய அரசு அனுமதியுடனும் என ஆறு மாதங்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்க ஆயத்தமாகிறதாம் மேலிடம்!

தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது. இதில் பிரதிநிதித்துவ அடிப்படையில் இலைக் கட்சிக்குக் கிடைக்கும் இரண்டு எம்.பி-க்கள் சீட்டுகளில் ஒன்றுக்குச் சிக்கல் இருக்கிறது. இந்தச் சூழலில், புதிதாகக் கூட்டணியில் இணைந்திருக்கும் மலர்க் கட்சி, ‘சிக்கலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எங்களுக்கு அந்த சீட்டைத் தாருங்கள்’ என்று பேரம் பேசத் தொடங்கியிருக்கிறதாம். ஒருவேளை மலர்க் கட்சிக்கு அந்த ஒரு சீட் கிடைத்தால், அது வாய்த்துடுக்கு மன்னர் புள்ளிக்குக் கொடுக்கப்படலாம் என்கிறார்கள். அதேநேரம், மாஜி காக்கிப் புள்ளியோ, இலைக் கட்சி மூலமாகவே அந்த சீட்டைப் பெறக் காய்நகர்த்துகிறாராம்!

மலைக்கோட்டை நகரத்திலுள்ள ஒரு பழைமையான மடத்தில், பல்வேறு சர்ச்சைகள் கும்மியடிக்கின்றன. மடத்தின் நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் ‘சன்’ பிரமுகர், மடத்தின் அறைகளை வாடகைக்கு விடுவதிலும், டொனேஷன்களைக் கபளீகரம் செய்வதிலுமே குறியாக இருப்பதால் மடத்தில் பணிபுரிபவர்கள் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது வரை கீழே இறங்கிவிட்டார்களாம். போலீஸ் சோதனையில் மது விற்ற ஒருவர் சமீபத்தில் சிக்கவே, மடத்திலுள்ள பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாக வெடித்துக் கிளம்புகின்றனவாம். ‘கர்நாடகாவில் இருக்கிறது இந்த மடத்துக்கான தலைமை பீடம். இங்கு என்ன நடக்கிறது என்பதே அங்கிருப்பவர்களுக்குத் தெரிவதில்லை. சொல்லவே நாக்கு கூசும் சம்பவங்களெல்லாம் நடக்கின்றன. மடத்தின் பெயரையே ‘சன்’ பிரமுகர் நிர்மூலமாக்கிவிட்டார்’ என்கிறார்கள் மலைக்கோட்டை பக்தர்கள். இதற்கிடையே, மடம் குறித்த பாலியல்ரீதியான விவகாரங்களும் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருப்பதால், விரைவிலேயே பூகம்பம் வெடிக்கும் என்கிறது விவரமறிந்த வட்டாரம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட தி.மு.க முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்குக்கு, சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியிருக்கிறது. ‘ஜாமீன் பெற்று வெளியே வரும் ஜாபரை, கட்சிக்காரர்கள் யாரும் பார்க்கச் செல்லக் கூடாது’ என்று தலைநகர் மாவட்டக் கட்சி நிர்வாகி ஒருவர், கறார் உத்தரவு போட்டிருக்கிறாராம். ‘ஜாபருடன் அண்ணன்தான் படுநெருக்கம். நம்மை போகக் கூடாது என்று சொல்லிவிட்டு, மேற்கு வழியாக அண்ணன் நிச்சயம் போய்ப் பார்த்துவிடுவார்’ என்று நக்கலடிக்கிறார்கள் தலைநகர் உடன்பிறப்புகள்!

பிரியாணிக்கு ஃபேமஸான ஊர் இருக்கும் மாவட்டத்தில், நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில், மூன்று தொகுதிகள் சூரியக் கட்சி வசமிருக்கிறது. மீதமிருக்கும் ஒரு தொகுதி இலைக் கட்சி வசமிருக்கிறது. அந்த ஒரு தொகுதியை மட்டும் முடக்கும் எண்ணத்தில் செயல்படுகிறாராம் சூரியக் கட்சியின் மாவட்டப் புள்ளி. அதாவது, கடந்த நான்கு ஆண்டுகளில், சூரியக் கட்சி வசமிருக்கும் மூன்று தொகுதிகளில், 152 கோடி ரூபாய்க்கும் மேல் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றனவாம். ஆனால், இலைக் கட்சியின் வசமிருக்கும் பிரியாணி தொகுதியில், வெறும் 8 கோடி ரூபாய்க்குத்தான் பணிகள் செய்யப்பட்டிருக்கின்றனவாம். ‘இப்படி வெளிப்படையாக ஒரு தொகுதியை வஞ்சித்தால், அது மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுமே... இப்படி இருந்தால், அந்தத் தொகுதியை நாம் எப்போதுமே கைப்பற்ற முடியாதே...’ என்று வேதனை தெரிவிக்கிறார்கள் சூரியக் கட்சியினரே!

"இந்த ரயில் நிலையத்தின் பணியாளர்களில் ஒருவருக்குக்கூடத் தமிழ் புரியல..." - துரை வைகோ வேதனை

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் முக்கிய நகரமாக விளங்கும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இன்று (ஏப்ரல் 24) திடீர் ஆய்வு மேற்கொண்ட திருச்சி எம்.பி.யும் ம.தி.மு.கமுதன்மைச் செயலாளருமான துரை வைகோ, ரயில் ந... மேலும் பார்க்க

Pahalgam : இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் எடுத்த முக்கிய முடிவுகள்; சிம்லா ஒப்பந்தம் ரத்து?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்திய மட்டுமில்லாது உலக நாடுகள் பலவும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலு... மேலும் பார்க்க

'நாங்களும் தயார்' - பாகிஸ்தான் உத்தரவை அடுத்து இந்தியா நடத்தி முடித்த ஏவுகணை சோதனை

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி தந்தே ஆக வேண்டும் எனவும், ம... மேலும் பார்க்க

Pahalgam Attack: அட்டாரி - வாகா எல்லை மூடல் - இந்தியா, பாகிஸ்தான்; யாருக்கு என்னென்ன பாதிப்புகள்?

ஜம்மு காஷ்மீரின் பஹால்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக அட்டாரி - வாகா எல்லையை முடியிருக்கிறது. அட்டாரி - வாகா... மேலும் பார்க்க

Pahalgam Attack: `இந்தத் தாக்குதலுக்கு காஷ்மீரை அவதூறு செய்யாதீர்கள்’ - கொலை செய்யப்பட்டவரின் மனைவி

மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையின் மேலாளரான ஷீலேஷ் கலாதியா (44), தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சக ஊழியரின் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். இதனிடையே... மேலும் பார்க்க

`சிக்கலில் 3 முக்கிய அமைச்சர்கள்... ஒரே நாளில் வந்த அதிரடி உத்தரவுகள்' - என்ன செய்யப்போகிறது திமுக?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் சூழலில், நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் எடுத்திருக்கும் நடவடிக... மேலும் பார்க்க