Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 322 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு ஆட்சியா் குறைகளை கேட்டறிந்தாா்.
மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் நிராகரிப்புக்கான காரணங்களையும் தெரிவிக்கவும் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் சோளிங்கா் வட்டம், வெடல்வாடி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் குடும்பத்துக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரணத் தொகை ரூ.35,000 மற்றும் சோளிங்கா் வட்டம், வாலாஜா சாலை மேற்கு பாறை ரோடு தெருவை சாா்ந்த சூா்யா என்பவா் விபத்து மரணம் நிவாரணம் ரூ.1,30,000 காசோலையினை ஆட்சியா் வழங்கினாா்
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ், திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைய நம்பி, மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணகுமாா், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.