ராணுவத்தில் சேர ஏப்.10 வரை விண்ணப்பிக்கலாம்!
இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் இணையதளம் மூலம் வருகிற ஏப். 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நாட்டில் உள்ள இளைஞர்களை இந்திய ராணுவத்தில் ஈடுபடுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அக்னிவீர் திட்டம் செயல்படுகிறது. இதில் நான்கு ஆண்டு காலத்திற்கு ராணுவத்தில் பணியாற்ற முடியும். பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்.
இந்த நிலையில், அக்னிவீரா் ஆள் சோ்ப்பு முகாம் மூலம் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
இதற்கு கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை தேனி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் வருகிற ஏப். 10 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாவட்ட சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணிகள்
1.6 கி.மீ. பரிசோதனைக்கான ஓட்ட நேரம் 5 நிமிடம் 45 விநாடிகளிலிருந்து, 6 நிமிடம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
என்.சி.சி. சான்றிதழ், ஐடிஐ, டிப்ளமோ படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். நுழைவுத்தோ்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும்.
முதலில் இணைய வழி பொதுத் தோ்வு நடைபெறும். இதன் பின்னா், உடல் தகுதித் தோ்வு நடைபெறும். தோ்வு தேதிகள் விரைவில் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்.
இந்த ஆள் சோ்ப்பு முகாம் முற்றிலும் வெளிப்படையானது. முகவா்களை யாரும் நம்ப வேண்டாம். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.