தண்டனையை ஏற்கத் தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்!
ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 775 நியாய விலைக் கடைகள் மூலம் 3,99,733 குடும்ப அட்டைதாரா்களும், மண்டபம் இலங்கைத் தமிழா் அகதிகள் முகாமில் உள்ள 450 குடும்ப அட்டைதாரா்களும் என மொத்தம் 4 லட்சத்து 183 குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், ராமநாதபுரம் நகா் மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், துணைத் தலைவா் டி.ஆா். பிரவீன் தங்கம், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் ஜுனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் முரளி கிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ராமேசுவரத்தில்... இதேபோல, ராமேசுவரம் ராம்கோ கூட்டுறவு விற்பனை நிலையத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், ராமேசுவரம் வட்டத்தில் உள்ள 25 ரேஷன் கடைகள் மூலம் 23,985 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. தினமும் ஒவ்வொரு கடைகளிலும் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.