செய்திகள் :

ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணியுடன் இணைவது எப்போது? அஜித் அகர்கர் பதில்!

post image

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயத்திலிருந்து மீண்டு எப்போது அணியுடன் மீண்டும் இணைவார் என்பது குறித்து இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் பேசியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் இன்று (செப்டம்பர் 25) அறிவித்தார். காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தினால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் சேர்க்கப்படவில்லை என அஜித் அகர்கர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அஜிக் அகர்கர் பேசியதாவது: இந்திய அணியின் துணைக் கேப்டனான ரிஷப் பந்த், அணியின் மிகவும் முக்கியமான வீரர். ஆனால், துரதிருஷ்டவசமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவர் முழுமையாக குணமடைந்து அணியுடன் இணைவார் என நம்புகிறோம். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா, மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பந்த் இருவரும் அற்புதமாக விளையாடி ரன்கள் குவித்தனர். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜா 516 ரன்களும், 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் நான்காம் இடமும் பிடித்தார்.

இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பந்த் 479 ரன்கள் குவித்தார். அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 6-வது இடமும் பிடித்தார். இந்த தொடரில் அவர் 3 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களை விளாசினார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து வேகமாக ரிஷப் பந்த்தின் கால் விரலில் பட்டதால், அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும், விரல் எலும்பு முறிவுடன் பேட் செய்து அணிக்காக அவர் ரன்கள் குவித்து அசத்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவர் மீண்டும் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க அணி வருகிற நவம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

India's chief selector Ajit Agarkar has spoken about when Indian wicketkeeper Rishabh Pant will return to the team after recovering from his injury.

இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 6 மாதங்களுக்கு ஓய்வு கேட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர்!

பயிற்சி ஆட்டத்தில் வேகப் பந்துவீச்சாளருக்கு காயம்; இந்திய அணிக்கு பின்னடைவா?

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரி... மேலும் பார்க்க

இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக காத்திருக்கிறோம்: ஸ்மிருதி மந்தனா

அணியில் உள்ள அனைவரும் போட்டியை வென்று கொடுப்பவர்கள் என தங்கள் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை... மேலும் பார்க்க

கருண் நாயரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா? - அஜித் அகர்கர் சூசகம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இருந்து கருண் நாயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறித்து அணித் தேர்வர் அஜித் அகர்கர் சூசகமாக பதிலளித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்... மேலும் பார்க்க

சென்னை டூ சிட்னி..! அஸ்வினை வரவேற்று விடியோ வெளியிட்ட சிட்னி தண்டர்!

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் இணைந்ததை வரவேற்று சிட்னி தண்டர் அணி விடியோ வெளியிட்டுள்ளது.இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைப் போன்று ஆஸ்திரேலியாவில் ந... மேலும் பார்க்க

இந்திய அணி அழுத்தத்திலிருந்து விடுபட இதனை செய்ய வேண்டும்: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் அழுத்தத்திலிருந்து விடுபட இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லேனிங் பேசியுள்ளார்.ஐசிசி மகளிர்... மேலும் பார்க்க

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 6 மாதங்களுக்கு ஓய்வு கேட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர்!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனக்கு 6 மாதங்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளார்.ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி இன்ற... மேலும் பார்க்க