குழந்தைகளுக்கு அனுமதி இல்லை: ஹஜ் பயணத்துக்கான புதிய விதிமுறைகள்!
ரூ. 100 கோடி வசூலித்த விடாமுயற்சி!
விடாமுயற்சி திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இதில் மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ளமால் சாதாரண கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். கதையாக அவருக்கு நல்ல படமாக அமைந்தாலும் ரசிகர்களிடம் விடாமுயற்சி அதிருப்தியை அளித்துள்ளது.
இதையும் படிக்க: சிறப்பு திரையிடல்களில் பாராட்டுகளைப் பெறும் காதல் என்பது பொதுவுடமை!
விசில் அடித்து கொண்டாடக்கூடிய வகையான படத்திலேயே அஜித்தை பார்த்த அவரின் ரசிகர்கள், விடாமுயற்சியில் புல்லரிக்கும் வசனங்களும் சண்டைக்காட்சிகளும் இல்லாததால் கடும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.
ஆனால், இப்படம் வணிக ரீதியாக முதல் நான்கு நாள்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், இந்தியளவில் ரூ. 72 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 30 கோடி வரையும் வணிகம் செய்துள்ளதாம்.