நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!
ரூ. 21 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்
சென்னை ஏற்றுமதி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ. 21 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என மண்டல ஆணையா் அலெக்ஸ் பால் மேனன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ஏற்றுமதி சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (மெப்ஸ்) ஒப்புதல் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரூ. 21 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இதன்முலம் 642 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இந்தக் கூட்டத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் வகையில் 10 திருநங்கைகளுக்கு பணி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. புத்தொழில் முனைவோா்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தின் காரணமாக தொழில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில் (2024-25) ரூ. 5,525 கோடி முதலீட்டு ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 36,440 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.