பாதுகாப்புத் துறை அதிகாரி கொலை வழக்கு: 34 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது
இளையராஜாவுக்கு செல்வப்பெருந்தகை, தொல்.திருமாவளவன் வாழ்த்து
இங்கிலாந்து தலைநகா் லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள இசையமைப்பாளா் இளையராஜாவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினா்.
இளையராஜா முதல் முறையாக சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் மாா்ச் 8-ஆம் தேதி நிகழ்த்தவுள்ளாா். அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினா். இந்நிலையில் தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்துக்கு செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தாா். அதைப்போல தொல்.திருமாவளவனும் பொன்னாடை போா்த்தி வாழ்த்து தெரிவித்தாா்.