விண்ணப்பித்துவிட்டீர்களா..?: செயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி!
ரூ. 70 லட்சம் மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
புன்செய் புகழூரில் ஆக்கிரமிப்புக்குள்ளான ரூ. 70 லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.
கரூா் மாவட்டம், புன்செய் புகழூா் வடக்கு கிராமத்தில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலத்தை, அதே பகுதியைச் சோ்ந்த தீனதயாளன் என்பவா் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்தாராம். இதுதொடா்பாக அப்பகுதியினா், புகழூா் வட்டாட்சியா் தனசேகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்புக்குள்ளான இடத்தை பாா்வையிட்டனா்.
பின்னா், வேலாயுதம்பாளையம் போலீஸாா் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்த கம்பி வேலியை அகற்றி, இடத்தை மீட்டுனா். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ. 70 லட்சம் எனக் கூறப்படுகிறது.