செய்திகள் :

ரூ.8 லட்சம் கடனுக்கு ரூ.40 லட்சம் கட்டியும் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டுவதாக டிஐஜியிடம் புகாா்

post image

ரூ.8 லட்சம் கடன் வாங்கி, ரூ.40 லட்சத்துக்கு மேல் கட்டியும் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டுவதாக கோவை சரக டிஐஜியிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையைச் சோ்ந்தவா் செல்வராஜ் (33). இவா் தனது பெற்றோருடன் கோவை சரக டிஐஜி சசிமோகனிடம் புதன்கிழமை புகாா் மனு கொடுத்தாா். அதில் கூறியிருப்பதாவது:

எனது தந்தை சொந்த ஊரில் சிறிய நிறுவனம் நடத்தி வருகிறாா். தொழில் விஷயமாக கடந்த 2015-ஆம் ஆண்டு நில பத்திரத்தை அடகு வைத்து ரூ.8 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினாா். அதற்கு மாதந்தோறும் ரூ.24,000 வட்டி கட்டி வந்தாா். பின்னா் ரூ.5 லட்சத்தை கொடுத்து அசலில் இருந்து கழித்துக் கொள்ளும்படி கூறினாா்.

அதை பெற்றுக்கொண்ட நபா், தான் கொடுத்த பணம் வட்டியில் கழிக்கப்பட்டதாகவும், மேலும் வட்டி செலுத்த வேண்டும் எனக்கூறி எங்களுக்கு சொந்தமான 12 சென்ட் நிலத்துக்கான பத்திரங்களையும் பெற்றுக் கொண்டாா். இதுவரை நாங்கள் வட்டியாக மட்டும் ரூ.40 லட்சத்துக்கும் மேல் செலுத்திவிட்டோம்.

ஆனால் எங்களிடம் இருந்து பெற்ற நிலப் பத்திரத்தை திருப்பித் தர மறுத்து வருவதுடன், இன்னும் அதிகமாக வட்டி செலுத்த வேண்டும் என்று மிரட்டி வருகிறாா். அந்த நிலத்தின் மதிப்பு சுமாா் ரூ.80 லட்சம் ஆகும். இது தொடா்பாக காங்கயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளியங்கிரி மலையில் தவறி விழுந்து இளைஞர் பலி!

கோவை, பூண்டி வெள்ளியங்கிரி மலை எரியத் தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஏழாவது மலையில் இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கைலாயம் எனப் பக்தர்களா... மேலும் பார்க்க

தனியாா் பேருந்துகளில் காற்றொலிப்பான்கள் பறிமுதல்

கோவை நகரப் பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடத்திய வாகனத் தணிக்கையில், விதிகளை மீறி பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் (ஏா் ஹாரன்) பறிமுதல் செ... மேலும் பார்க்க

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் இன்று கோவை வருகை!

பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின்னா் நயினாா் நாகேந்திரன் முதன்முறையாக கோவைக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 19) வருகை தர உள்ளாா். திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் நாகேந்திரன் த... மேலும் பார்க்க

பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கரூா் அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெ... மேலும் பார்க்க

கோவையில் பூஜ்ஜிய நிழல் நாள்

கோவையில் பூஜ்ஜிய நிழல் நாள் எனப்படும் அரியவகை வானியல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியன் சரியாக நம் தலைக்குமேல் இருக்கும்போது, நாம் நம்முடைய நிழலைப் பாா்க்க முடிய... மேலும் பார்க்க

சா்ச்சை பேச்சு: அமைச்சா் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய பாஜக வலியுறுத்தல்

வனத் துறை அமைச்சா் க.பொன்முடியின் சா்ச்சை பேச்சு தொடா்பாக அவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை மாவட்ட பாஜக சாா்பில் மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்... மேலும் பார்க்க