செய்திகள் :

`ரூ.8 லட்சம்' கேட்ட DIG வீட்டில், ரூ.5 கோடி, 1.5 கிலோ தங்கம், சொகுசு கார்கள் பறிமுதல் - CBI அதிரடி

post image

பஞ்சாப் டி.ஐ.ஜி ஹர்சரன் சிங்

பஞ்சாப்பில் உள்ள ரோபர் மண்டலத்தில் டி.ஐ.ஜியாக இருப்பவர் ஹர்சரன் சிங். இவர் பதேகர் சாஹிப் பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஆகாஷ் என்பவரிடம் ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்டார்.

இப்பணத்தைக் கொடுக்கவில்லையெனில் போலி வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டினார். தனது கூட்டாளி கிருஷ்ணா மூலம் இப்பணத்தைக் கொடுக்கும்படி தொடர்ந்து நிர்ப்பந்தம் கொடுத்து வந்தார்.

 பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்

சி.பி.ஐ.யில் புகார்

அடிக்கடி கிருஷ்ணா பழைய இரும்பு வியாபாரிக்கு போன் செய்து பணத்தைக் கொடுக்கும்படி கேட்டார். அதோடு ஆகஸ்ட், செப்டம்பர் மாத லஞ்சப்பணமும் கொடுக்கப்படவில்லை என்று போனில் பேசிய ஆடியோவை ஆகாஷ் பதிவு செய்து வைத்துக்கொண்டார்.

தொடர்ந்து நெருக்கடி அதிகரித்ததால் ஆகாஷ் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக சி.பி.ஐ.யில் புகார் செய்தார்.

சி.பி.ஐ அதிகாரிகள் இது குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை செய்தனர். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி கிருஷ்ணாவிடம் ரூ.8 லட்சத்தைக் கொடுக்கும்படி ஆகாஷிடம் கேட்டுக்கொண்டனர்.

டி.ஐ.ஜி ஹர்சரண் சிங் கைது

ஆகாஷ் அப்பணத்தை கிருஷ்ணாவிடம் கொடுத்தபோது மறைந்திருந்த அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ அதிகாரிகள் மொகாலியில் உள்ள டி.ஐ.ஜி ஹர்சரண் சிங் அலுவலகத்திற்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.

கைதைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டு ரோபர், சண்டிகர், மொகாலியில் நடந்தது. இதில் ரூ.5 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதோடு 1.5 கிலோ தங்க ஆபரணங்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு மெர்சிடிஸ் கார், ஒரு ஆடி காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 22-க்கும் மேற்பட்ட ஆடம்பர கைக்கடிகாரங்கள், லாக்கர் சாவிகள், 40 லிட்டர் வெளிநாட்டு மதுபானம், 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 பறிமுதல் செய்யப்பட்ட தங்க ஆபரணங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்க ஆபரணங்கள்

கிருஷ்ணா வீட்டில் ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சொத்துகளை மதிப்பீடு செய்யும் பணிகள் நடந்து வருவதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர். ஹர்சரண் சிங் பஞ்சாப்பில் பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு என பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். முன்னாள் டி.ஜி.பி. முல்லர் மகனான ஹர்சரண் சிங் கடந்த ஆண்டுதான் ரோபர் பகுதியில் டி.ஐ.ஜியாகப் பதவியேற்றார். இன்று கைது செய்யப்பட்ட இவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றார்.

ராஜபாளையம்: கனமழையால் இடிந்து விழுந்த சுவர்; 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர்களது குடும்பம் மூன்று தலைமுறைகளாக ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வருகிறது.... மேலும் பார்க்க

``குறைந்த விலைக்கு பட்டாசு; ஆன்லைன் விளம்பரம் நம்பி ஏமாறாதீர்’’ - எச்சரிக்கும் காவல்துறை!

வரும் 20-ம் தேதி, தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொது மக்கள் பலரும் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக குறைந்த விலைக்க... மேலும் பார்க்க

வரிச்சியூர் செல்வம் கூட்டாளி திண்டுக்கல் சிறையில் அடைத்த மறுநாளே மரணம் - பின்னனி என்ன?

கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை தி.மு.க பிரமுகர் கதிரவனைக் கடத்தி ஒரு கும்பல் பணம் பறித்தது. மேலும் அந்தக் கும்பல், திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார... மேலும் பார்க்க

சபரிமலை: தங்கம் மோசடி வழக்கில் உண்ணிகிருஷ்ணன் போற்றி நள்ளிரவில் கைது; 10 மணி நேரம் விசாரணை!

சபரிமலை தங்க கவசம்சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் துவாரபாலகர் சிலை ஆகியவை செம்பு உலோகத்தால் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 1999-ம் ஆண்டு தொழிலதிபர் விஜய் மல்லையா தங்கம் பதிக்க சுமார் 30 கிலோ தங்கம் வழங்க... மேலும் பார்க்க

கரூர் 41 பேர் பலியான சம்பவம்: சி.பி.ஐ விசாரணை இன்று முதல் தொடக்கம் - பின்னணி என்ன?

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கடந்த 27 - ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்நிலையில், தமிழக அரசு ஓய்வு பெற்ற உ... மேலும் பார்க்க

ஈரோடு: பெண் குழந்தை கடத்தல், வேதனையில் பெற்றோர்; போலீஸார் தீவிர விசாரணை - நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், சித்தோடு கோணவாய்க்கால் என்ற இடத்தில் மேம்பாலத்துக்கு அடியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவெங்கடேஷ்,கீர்த்தனா தம்பதி,கடந்த சில மாதங்களாக அங்கு தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். ... மேலும் பார்க்க