செய்திகள் :

ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து உச்சம் தொட்ட தங்கம் விலை!

post image

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. . ஏப்.13-ல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.70,000-யைக் கடந்த நிலையில் பின்னர் சற்று சரிவடைந்த நிலையில் ஏப். 16-ல் மீண்டும் 70,000-யைக் கடந்தது. தற்போது தங்கத்தின் விலை ரூ. 72,000-யைக் கடந்துள்ளது.

இன்று(திங்கள்கிழமை) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயா்ந்து ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 உயர்ந்து ரூ. 9,015-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ.111-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 1,11,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த வாரம் மூன்று நாள்களாக தங்கத்தின் விலை மாற்றமின்றி இருந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு!

கருணை, முற்போக்கு சிந்தனையுடன் திகழ்ந்தவர்! போப் பிரான்சிஸ் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். போப் பிரான்சிஸ் இன்று(ஏப். 21) அதிகாலை உயிரிழந்ததாக வாடிகன் தெரிவித்து... மேலும் பார்க்க

5 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று ச... மேலும் பார்க்க

மக்களாட்சியை வலுப்படுத்தும் குடிமைப் பணியாளர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

குடிமைப்பணிகள் நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து குடிமைப் பணியாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தேசிய குடிமைப் பணிகள் நாளில், நமது மக... மேலும் பார்க்க

வரதட்சணைப் புகார்: விசாரணைக்கு ஆஜராகாத இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன்!

திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகள் அளித்த வரதட்சணைப் புகாரின் கீழ், அவரது கணவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் இருட்டுக் க... மேலும் பார்க்க

நீட் ரத்து செய்தால் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் விவகாரம் தொடர்பான விவாதம் வந்தபோது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் எழுந்தது.மத்தியில் காங்கிரஸ் உடன் திமுக... மேலும் பார்க்க

ரயில்களில் காவி நிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்

காவிநிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி பெட்டி, சாதாரண ரயில்களின் முன்பகுதி என்ஜின்களைவிட மிகவும் எடை குறைவு என்று ரயில்வே ஆண... மேலும் பார்க்க