ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை; காரணம் என்ன?
சென்னையில் மனைவி கண் முன் வெட்டி கொல்லப்பட்ட 'ஏ பிளஸ் ரௌடி' ராஜ்
சென்னை மணலி சின்ன சேக்காடு வேதாச்சலம் தெருவில் வசித்து வந்தவர் ராஜ் என்கிற தொண்டை ராஜ் (40).
இவர் எம்.கே.பி. நகர் காவல் நிலைய 'ஏ பிளஸ்' ரௌடி. இவர் கடந்த 20-ம் தேதி மாலை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகர் மெயின் ரோடு பகுதியில் மனைவி தீபாவுடன் நடந்து சென்றார்.
அப்போது பைக்கில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் ராஜைச் சரமாரியாக வெட்டியது.
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தீபா, கொலையைத் தடுக்க முயன்றார். ஆனால் அந்தக் கும்பல், ராஜை வெட்டிக் கொலை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.
இதையடுத்து தீபா, வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ராஜின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து ராஜ் கொலை குறித்து வழக்குப் பதிந்த போலீஸார் தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடிவந்தனர்.
போலீஸாரின் தேடுதல் வேட்டையில் வியாசர்பாடியைச் சேர்ந்த சூர்யா (27), எம்.கே.பி. நகரைச் சேர்ந்த ஸ்ரீராம் (25), சப்பை மூக்கு அஜித் (25), முருகன் (28) ஆகிய 4 பேர் சிக்கினர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தி, அந்நால்வரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 5 கத்திகள், புல்லட் உள்பட இரண்டு பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட ராஜ், வியாசர்பாடி உதயசூரியன் நகரில் வசித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றினார்.
இவர் மீது கொலை உள்பட 12 குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், ராஜுக்கு எதிரிகளால் கொலை மிரட்டல் வந்ததையடுத்து தன்னுடைய இருப்பிடத்தை மணலிக்கு மாற்றினார்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி மனைவியுடன் வியாசர்பாடிக்கு வந்திருந்தார் ராஜ். இதைத் தெரிந்த அவரின் எதிர் டீம், பக்கவாக பிளான் போட்டு ராஜை மனைவியின் கண் முன்னால் கொலை செய்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs