மும்பை: வாகனங்களுடன் வாள் வீச்சு சண்டை; ரகளை செய்த சிறுவரை வளைத்துப் பிடித்த போலீஸ்; என்ன நடந்தது?
மாநகராட்சி பேருந்து
மும்பை பாண்டூப் பகுதியில் மாநகராட்சி பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சிறுவர் கையில் வாளுடன் பேருந்தைத் தடுத்து நிறுத்தினார்.
அவர் பேருந்து முன்பு நின்று கொண்டு வாளால் மிரட்டினார். பேருந்து நின்றதும் வாளால் பேருந்தின் முன் கண்ணாடியைத் தாக்கி சேதப்படுத்தினார்.
அதோடு பேருந்து ஓட்டுநரையும் தாக்கி திட்டினார். அந்த சிறுவர் நடத்திய தாக்குதலைப் பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.
ஆனால் யாரும் அதனைத் தடுக்க முன்வரவில்லை. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் அப்படியே நின்றன.
கண்ணாடி சேதம்
16 வயது சிறுவர் பேருந்தைத் தாக்கி விட்டு அருகில் நின்ற ஆட்டோ மற்றும் டேங்கர் லாரியையும் தாக்கி கண்ணாடியைச் சேதப்படுத்தினார்.
பேருந்து தாக்கப்பட்டதில் ரூ.70 ஆயிரம் அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து சிறுவரைப் பிடித்துச் சென்றனர். அவருக்கு 16 வயது என்பதால் சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்குப்பதிவு
அவரிடம் போலீஸார் விசாரித்ததில் வீட்டில் அவரது சித்தப்பா சிறுவர் மீது திருட்டு குற்றச்சாட்டுச் சுமத்தி இருக்கிறார். இதனால் அவருடன் சண்டையிட்டுக்கொண்டு கோபத்தில் வீட்டிலிருந்த வாளை எடுத்துக்கொண்டு தெருவிற்கு வந்து கண்ணில் பட்ட வாகனங்களையெல்லாம் தாக்கி இருப்பது தெரிய வந்தது.
அபாயகரமான ஆயுதங்களைப் பயன்படுத்தியது, பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs