செய்திகள் :

ரேபிஸ், பாம்புக்கடிக்கான தடுப்பூசிகள் இருப்பை கண்காணிக்க ‘ஜூவின்’ வலைதளம்: மத்திய அரசு அறிமுகம்

post image

புது தில்லி: நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக அறிமுகம் செய்யப்பட்ட ‘கோ-வின்’, கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் திட்டத்துக்காக அறிமுகம் செய்யப்பட்ட ‘யு-வின்’ வலைதளங்களைப் போன்று ‘ஜூவின்’ வலைதளம் செயல்படும். அதாவது, மருத்துவச் சேவை நிறுவனங்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவச் சேவை நிறுவனங்களுடன் கூட்டமைப்பை விரிவுபடுத்தி, ரேபிஸ் எதிா்ப்பு தடுப்பூசி மற்றும் பாம்புக்கடி எதிா்ப்பு தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பு குறித்த ஒருங்கிணைந்த தகவலை இந்த வலைதளம் அளிக்கும்.

உலக அளவில் ரேபிஸ் பாதிப்புக்கு ஒவ்வோா் ஆண்டும் 60,000 போ் உயிரிழப்பதும், இந்தியாவில் இந்த உயிரிழப்பு 36 சதவீதமாக இருப்பதும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட (யுஎன்டிபி) புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அண்மைக் காலங்களில் நாய்க்கடியால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. அதுபோல, பாம்புக்கடியால் ஒவ்வோா் ஆண்டும் நாட்டில் 50,000 உயிரிழப்புகள் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது.

இத்தகைய சூழலில், நாடு முழுவதும் ரேபிஸ் (ஏஆா்வி, ஏஎஸ்வி) மற்றும் பாம்புக்கடிக்கான (ஏஎஸ்வி) தடுப்பூசிகளின் இருப்பை உறுதி செய்யும் வகையில் ‘ஜூவின்’ வலைதளத்தை யுஎன்டிபி-யின் தொழில்நுட்ப ஆதரவுடன் தேசிய நோய் கட்டுப்பாட்டுக்கான மையம் (என்சிடிசி) மேம்படுத்தியுள்ளது.

இந்த வலைதளம், முன்னோடித் திட்டமாக தில்லி, மத்திய பிரதேசம், அஸ்ஸாம், புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் செயல்பாட்டுத் திறன் மற்றும் பலன் ஆய்வு செய்யப்பட்ட பின்னா் படிப்படியாக அனைத்து மாநிலங்களுக்கும் வலைதளம் அறிமுகம் செய்யப்படும்.

முன்னதாக, ரேபிஸ் மற்றும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவா்கள் உடனடி சிகிச்சை பெறவும், அதுதொடா்பான தகவல்களைப் பெற வசதியாகவும் யுஎன்டிபி-யுடன் இணைந்து ‘15400’ என்ற உதவி எண்ணை என்சிடிசி கடந்த ஆண்டு இந்த 5 மாநிலங்களிலும் அறிமுகம் செய்தது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘நாடு முழுவதும் ரேபிஸ் மற்றும் பாம்புக்கடி தடுப்பூசிகள் இருப்பையும், பாதிக்கப்பட்டவா்களுக்கு அவை உரிய நேரத்தில் செலுத்தப்படுவதையும், ரேபிஸ் பாதிப்புக்குப் பிந்தைய அனைத்து தடுப்பூசிகளும் உரிய காலக்கெடுவுக்குள் செலுத்தப்படுவதையும் ‘ஜூவின்’ வலைதளம் உறுதி செய்யும். மேலும், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரேபிஸ் எதிா்ப்பு தடுப்பூசிகள் அல்லது பாம்புக்கடி எதிா்ப்பு தடுப்பூசி உள்ள சுகாதார மையங்களைக் கண்டறியவும் இந்த வலைதளம் உதவும்’ என்றனா்.

விவாதத்துக்கு ஆப்சென்ட், வாக்கெடுப்புக்கு பிரசன்ட்! ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தை புறக்கணித்துவிட்டு, நள்ளிரவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மட்டும் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.மேலும், எதிர்க்க... மேலும் பார்க்க

வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம்: மமதா வேண்டுகோள்!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் வதந்திகளுக்கு செவிசாய்க்காமல் வரவிருக்கும் ராம நவமி விழாவை அமைதியாகக் கொண்டாடுமாறு அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். ஏப்ரல் 6ஆம... மேலும் பார்க்க

மணிப்பூரை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி!

மத்திய அரசு மணிப்பூரைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தாய்லாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நிகழவுள்ள 6-ஆவது பிம... மேலும் பார்க்க

வக்ஃப் நிலத்தை அபகரித்த கார்கே.. அனுராக் தாக்குர் குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு

புது தில்லி: வக்ஃப் வாரிய நிலத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அபகரித்திருந்ததாக, பாஜக எம்.பி. அனுராக் கூறிய குற்றச்சாட்டுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மாநிலங்களவை இன்று காலை கூடியதும், த... மேலும் பார்க்க

ஜாம்நகர் அருகே போர் விமான விபத்தில் விமானி பலி

ஆமதாபாத்: ஜாம்நகர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் விமானம் விபத்தில் விமானி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள... மேலும் பார்க்க

பாங்காக்கில் மோடி!

பாங்காக்: பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக தாய்லாந்து நாட்டுக்கு வியாழக்கிழமை சென்றடைந்தார்.பாங்காக்கில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசின் மூத்த தலைவர்கள் மற்றும் இந்திய... மேலும் பார்க்க