Vikatan Weekly Quiz: விவாதப்பொருளான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு டு ஐபிஎல்; இந்த...
லக்னௌ அணியில் இணைந்த மயங்க் யாதவ்!
லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அதன் அணியில் இணைந்தார்.
கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய மயங்க் யாதவ் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
இந்திய வீரர்களில் அதிவேகமாக பந்தினை வீசி புகழ்ப்பெற்றவர் வரிசையில் மயங்க் யாதவும் ஒருவர். ஆர்சிபிக்கு எதிராக 156.7 கி.மீ./மணி வேகத்தில் பந்து வீசியுள்ளார்.
தில்லியைச் சேர்ந்த மயங்க் யாதவ் 4 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இளம் வீரரான மயங்க் யாதவ் (22 வயது) குறைவான போட்டிகளிலேயே கவனம் பெற்றுவிட்டார்.
காயம் காரணமாக விலகியிருந்த மயங்க் யாதவ் தற்போது மீண்டும் உடல்தகுதி பெற்று அணியில் இணைந்துள்ளார்.
லக்னௌ அணி சிஎஸ்கேவிடம் போதிய அளவுக்கு பந்துவீச்சாளர்கள் இல்லாமல் தோற்றது. அதனால், இவரது வருகை மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
⚡ ⚡ ⚡ ⚡ ⚡ pic.twitter.com/c0G5p3svMA
— Lucknow Super Giants (@LucknowIPL) April 16, 2025