செய்திகள் :

லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கவுள்ள ஆஸி. ஆல்ரவுண்டர்!

post image

பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடவுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது.

பேட்ஸ்மேனாக மட்டும்...

விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ், இந்த சீசனில் பேட்டிங் மட்டும் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை: ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!

ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனான மிட்செல் மார்ஷ் விரைவில் ஐபிஎல் தொடருக்காக லக்னௌ அணியில் இணையவுள்ளார். காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடாத மிட்செல் மார்ஷ், தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்.

காயத்திலிருந்து மீண்டுள்ள மிட்செல் மார்ஷ் லக்னௌ அணிக்காக முன்வரிசையில் இம்பாக்ட் வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டரான மார்ஷ், இந்த சீசனில் பந்துவீச்சில் ஈடுபட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெறவேண்டும்?: ஏபிடி வில்லியர்ஸ்

கடந்த 3 சீசன்களாக தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய மிட்செல் மார்ஷ், அடிக்கடி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக வெறும் 4 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார்.

கடந்த ஆண்டு துபையில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் மிட்செல் மார்ஷ் ரூ.3.40 கோடிக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளைத் தவறவிடும் பும்ரா! மும்பை அணிக்கு பின்னடைவா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரருமான ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

புதிய மத்திய ஒப்பந்தங்களை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!

2025 ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில், மொத்தமாக 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெற்... மேலும் பார்க்க

ஆஸி.யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி!

இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக்கில் அரையிறுதியில் இந்திய அணி ஆஸியை வீழ்த்தியது. நேற்றிரவு நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 220/7 ரன்கள் எடுத்தது. அத... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் கோலாகலம்!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது.வட இந்தியாவில் பெரியளவில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஊர்வலங்கள் நடத்தப்படும். ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகள... மேலும் பார்க்க

மகளிர் பிரிமீயர் லீக் எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 214 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினே... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிடும் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்... மேலும் பார்க்க