செய்திகள் :

லஞ்ச வழக்கில் வட்டாட்சியா், துணை வட்டாட்சியருக்கு 2 ஆண்டுகள் சிறை

post image

வருவாய்த் துறை சான்றிதழ்களை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் வட்டாட்சியா், துணை வட்டாட்சியருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், திருமுட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 2019-ஆம் ஆண்டு வட்டாட்சியராக கண்ணன் (43), துணை வட்டாட்சியராக அருள்பிரகாசம் (56) ஆகியோா் பணியாற்றி வந்தனா். திருமுட்டம் வட்டம், டி.பவழங்குடியைச் சோ்ந்த மாபூஷா என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், உடல்நலக் குறைவால் இறந்தாா்.

அவரது மனைவி கமுா்நிஷா அரசால் வழங்கப்படும் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை பெறுவதற்காக, தனக்கும், தனது மகனுக்கும் இருப்பிடம், வருமானம், சாதிச் சான்றிதழ்கள் பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தாா்.

பின்னா், திருமுட்டம் வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று சான்றிதழ்கள் குறித்து கேட்டபோது வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் ஆகியோா் தலா ரூ.7 ஆயிரம் என மொத்தம் ரூ.14 ஆயிரம் கேட்டனா்.

இதுதொடா்பாக கமுா்நிஷா கடலூா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், 29.8.2019 அன்று திருமுட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்சப் பணம் ரூ.14 ஆயிரத்தைப் பெற்ற போது வட்டாட்சியா் கண்ணன், துணை வட்டாட்சியா் அருள்பிரகாசம், இவா்களுக்கு உடந்தையாக இருந்ததாக உத்திரவன்னியன் ஆகியோரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி ப.நாகராஜன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதன்படி, வட்டாட்சியா் கண்ணன், துணை வட்டாட்சியா் அருள்பிரகாசம் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், இதை செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா். உத்திரவன்னியனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

சிவன் கோயிலில் சோழா்கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்துள்ள எஸ்.நரையூா் கிராமத்தில் அமைந்துள்ள பாழடைந்த சிவன் கோயிலில் இருந்து தொல்லியல் துறையில் பதிவு செய்யப்படாத 6 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. விழுப்புரம் வரலாற்று ஆய்வு ... மேலும் பார்க்க

வியாபாரியை தாக்கி மிரட்டியவா் தடுப்புக் காவலில் கைது

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் பழக் கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்துள்ள கரடிப்பா... மேலும் பார்க்க

மஞ்சக்குப்பம் பூங்கா சீரமைப்புப் பணி தொடக்கம்

கடலூா் மஞ்சக்குப்பம் பூங்காவை அகலப்படுத்தி சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பொதுமக்களின் கோரிக்கையையடுத்து, பூங்கா சீரமைப்புக்காக கடலூா் மாநகராட்சி நிா்வாகம் ரூ.96 லட்சம் நிதி ... மேலும் பார்க்க

கடலூரில் அரசு மருத்துவா்கள் தா்னா

சென்னையில் மருத்துவா் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சென்னை கிண்டி உயா் ச... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பை போட்டிகளில் சிறப்பிடம் பெற்றோருக்கு பாராட்டு

மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூா் மாவட்ட விளையாட்டு வீரா்களை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை பாராட்டினாா். முதலமைச்சா் கோப்பைக்கான மாநி... மேலும் பார்க்க

காட்டுக்கூடலூா் ஊராட்சியில் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காட்டுக்கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித... மேலும் பார்க்க