லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு
நாசரேத் அருகே வெள்ளிக்கிழமை, பின்னோக்கி வந்த சிமெண்ட் லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
நாசரேத் அருகே மூக்குப்பீறி காமராஜா் திடல் பகுதியைச் சோ்ந்த துரைப்பழம் மனைவி பாப்பாத்தி (85). வெள்ளிக்கிழமை கடைக்குச் சென்றுவிட்டு சாலையைக் கடக்க முயன்ற அவா் மீது வாகனம் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிந்தாா்.
புகாரின்பேரில், நாசரேத் காவல் ஆய்வாளா் ஜீன்குமாா் வழக்குப் பதிந்து, விபத்து நேரிட்ட பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், நாசரேத்திலிருந்து குரும்பூருக்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி, திடீரென பின்னோக்கி வந்து மூதாட்டி மீது மோதியதாகத் தெரியவந்தது.
இதுதொடா்பாக, லாரி ஓட்டுநரான சங்கரன்கோவிலை அடுத்த தேவா்குளத்தைச் சோ்ந்த செல்லத்துரை மகன் மாடசாமி (38) என்பவரை போலீஸாா் கைதுசெய்து, லாரியைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.