LGBTQIA++: ``தன்பாலின உறவுகள் பழங்காலத்திலிருந்தே அங்கீகரிக்கப்பட்டுள்ளன'' -உச்ச...
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: இலவச இணையசேவை வழங்கும் எலான் மஸ்க்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இடையூறின்றி இணையசேவை வழங்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்சலீஸ் வறண்ட பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காட்டுத்தீ பாதித்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தக் காட்டுத்தீயினால் 5 பேர் பலியான நிலையில், பலரது கார்களும் தீக்கிரையாகின.
காட்டுத் தீயினால் பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் கடுமையாக போராடிவருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதை பார்த்து உலகப் பணக்காரரும், ஸ்பேக் எக்ஸ், எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், அனைவருக்கும் உதவும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஸ்டார்லிங்கின் டெர்மினல் சாதனங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் செய்தி நிறுவனங்களுக்கு இடையூறின்றி இணையசேவை கிடைக்கும் வகையில் இந்த முடிவெடுக்கப்படுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதுபற்றி எலான் மஸ்க் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாளை காலை காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவருக்கு இலவச டெர்மினல்களை வழங்கும். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் மக்களுக்கு நம்பகத்தனமான இணையவசதியைக் கொண்டிருப்பதே இதன் முக்கிய நோக்கமாகவும் கொண்டுள்ளது. இது சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் அனைவருக்கும் இடையேயான தொலைத்தொடர்பை ஏற்படுத்துகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.