செய்திகள் :

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

post image

இன்டர் மியாமி அணி சியாட்டல் சௌண்டர்ஸ் அணியை 3-1 என வீழ்த்தியது.

லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்த அணியிடம்தான் இன்டர் மியாமி 0-3 என தோற்றது குறிப்பிடத்தக்கது.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி

எம்எல்எஸ் தொடர்ல் இன்டர் மியாமி அணி சியாட்டல் சௌண்டர்ஸ் அணியுடன் இன்று அதிகாலை மோதின.

இந்தப் போட்டியில் 12-ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி உதவியால் ஜோர்டி ஆல்பா கோல் அடித்தார். அடுத்து 41-ஆவது நிமிஷத்தில் ஆல்பா உதவியால் மெஸ்ஸி கோல் அடித்தார்.

52-ஆவது நிமிஷத்தில் டீ பால் உதவியால் ஐயான் ப்ரை கோல் அடிக்க, இண்டர் மியாமி 3-0 என முன்னிலை பெற்றது.

கடைசி வரை போராடிய சியாட்டல் அணி 69-ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது

மெஸ்ஸி ஆட்ட நாயகன்

சிறப்பாக விளையாடிய மெஸிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

இந்த சீசனில் மெஸ்ஸி 20 போட்டிகளில் 21 கோல்கள் அடித்து அசத்தியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

சியாட்டல் அணியுடன் லீக்ஸ் கோப்பையில் ஏற்பட்ட மோதலால் லூயிஸ் சௌரஸ் 3 எம்எல்எஸ் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், 27 போட்டிகளில் 49 புள்ளிகளுடன் இன்டர் மியாமி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

ரியல் மாட்ரிட் அணிக்காக மிகவும் இள வயதில் ஃபிராங்கோ மாஸ்டன்டுவோனோ சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி சாதனை படைத்துள்ளார். 18 வயதாகும் ஃபிராங்கோ மாஸ்டன்டுவோனோ ஆர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பி... மேலும் பார்க்க

கண்மணி அன்னதான விருந்து - நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!

நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னதானச் சேவையைத் தொடங்கியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் திரைத்துறை நடிப்பைத் தாண்டி வசதி இல்லாதவர்களுக்கு பல்வேறு சேவைகளையும் உதவிகளையும் செய்து வருகிறார்.அந்த வகையில், தற்போது க... மேலும் பார்க்க

கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?

கழிப்பறையில் ஹேண்ட் டிரையர் எனும் கை உலர்த்திகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கழிப்பறையில் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் நிறைய இருப்பதால் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பிறக... மேலும் பார்க்க

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அதிவேகமாக 880 கோல்களை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார். இன்டர் மியாமி அணிக்காக இன்று அதிகாலை நடந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ம... மேலும் பார்க்க

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். மிமிக்ரி கலைஞரான இவர் தீபாவளி படத்தி... மேலும் பார்க்க

புதிய தொடரில் நடிக்கும் பாரதி கண்ணம்மா வினுஷா!

நடிகை வினுஷா தேவி புதிய தொடரில் நடிக்கவுள்ளார். பாரதி கண்ணம்மா தொடரைப் போன்றே இந்தத் தொடரிலும் பெண் குழந்தைக்குத் தாயாகவே நடிக்கவுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நடித்... மேலும் பார்க்க