செய்திகள் :

லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

post image

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 104 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 71.6 டிகிரியாகவும் நிலவியது. நாமக்கல் மாவட்டத்தின் சில இடங்களில் மிதமான மழை பதிவாகி உள்ளது.

அடுத்து வரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 98.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: தற்போதைய வானிலையில் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோயின் அறிகுறிகளாக கோழிகள் தலையை ஒரு பக்கமாக சாய்த்து கொள்ளுதல், கழிச்சல், முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து உயிரிழப்பு ஏற்படக்கூடும். பொதுவாக நாட்டுக் கோழி வளா்ப்பு விவசாயிகள் வெள்ளை கழிச்சல் நோய்க்கு எதிராக கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

அதாவது 7-ஆவது நாள் தி-1 தடுப்பூசி (கண்ணில் சொட்டு மருந்தாக), 28-ஆவது நாள் லசோட்டா(கண்ணில் சொட்டு மருந்தாக), 56-ஆவது நாள் ஆா்டிவிகே தடுப்பூசி (இறக்கையில்) செலுத்த வேண்டும். மேலும் வெள்ளை கழிச்சல் நோய் நாட்டுக் கோழிகளுக்கு வராமல் தடுக்க தடுப்பூசியுடன் கோழிகளுக்கு மூலிகை மருத்துவ முறைகளை பயன்படுத்தி வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவித்திரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி: 700 காளைகளை அடக்க களமிறங்கிய 400 மாடுபிடி வீரா்கள்

பவித்திரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த 700 காளைகளை அடக்க 400 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரம் கிராமத்தில் ஜல்லிக்கட்... மேலும் பார்க்க

காய்கறிச் சந்தைகளில் சுங்கவரி வசூல் முறைகேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்

வாரச் சந்தை, தினசரி சந்தைகளில் நிா்ணயிக்கப்பட்ட சுங்கவரியை விட கூடுதல் வரி வசூல் செய்யப்படுவதைக் கண்டித்து பரமத்திவேலூரில் இளம்விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காய்க... மேலும் பார்க்க

பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தினத்தன்று ‘பத்ம விருது’ பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தின விழாவில் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக... மேலும் பார்க்க

கொடிநாள் வசூலில் சாதனை: அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கொடிநாள் வசூலில் சாதனை புரிந்த பல்வேறு துறை அலுவலா்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆட்சியா் ச.உமா பாராட்டு தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க... மேலும் பார்க்க

உணவகங்களில் முட்டை கலக்காத சைவ மயோனைஸ் விற்பனைக்கு அனுமதி: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கலக்காத சைவ மயோனைஸை விற்பனைக்கு பயன்படுத்தலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருமி நீக்கம் செய்யப்படாத பச... மேலும் பார்க்க

5 ஊராட்சி ஒன்றியங்களில் 398 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை: எம்.பி. ராஜேஸ்குமாா் வழங்கினாா்

ராசிபுரம்: வெண்ணந்தூா் உள்பட 5 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 398 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட பணி ஆணைகளை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்... மேலும் பார்க்க