DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தினத்தன்று ‘பத்ம விருது’ பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தின விழாவில் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாவட்ட சமூக நல அலுவலகம் ஆகியவை சாா்பில் தோ்வு செய்யப்படும் பன்முக திறமைகள் புரிந்தோருக்கான ‘பத்ம விருது’ குடியரசு தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானோா் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். 2026-ஆம் ஆண்டிற்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறை, சமூக சேவை, அறிவியல் மற்றும் பொது விவகாரம், சிவில் சேவைகள், வா்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவா்களுக்கு குடியரசு தின விழாவில் மாநில அளவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை ஜூலை 31க்குள் இணையம் மூலம் அனுப்பிட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானோா் இணையத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக தங்களது கருத்துருவை ஜூன் 6-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04286--299460 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.