செய்திகள் :

லோகேஷ் உடனான படம் எப்போது ஆரம்பம்? அமீர் கான் பதில்!

post image

நடிகர் அமீர் கான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த்தை நாயகனாக வைத்து கூலி படத்தை உருவாக்கி வருகிறார். இதில், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகர் அமீர் கான் நடித்துள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து, இந்தாண்டு டிசம்பர் மாதம் கைதி - 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

அண்மையில் நேர்காணலில் பேசிய நடிகர் அமீர் கான், “நானும் லோகேஷ் கனகராஜும் ஒரு படத்தில் பணியாற்றவுள்ளோம். இது மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆக்‌ஷன் சூப்பர் ஹீரோ பாணி படமாக இருக்கும். அடுத்தாண்டு இறுதியில் இதற்கான பணிகள் துவங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

அமீர் கான் குறிப்பிட்ட சூப்பர் ஹீரோ கதை நடிகர் சூர்யாவுக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன, ‘இரும்பு கை மாயாவி’யாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படம் எப்போது துவங்கும் என்கிற கேள்விக்கு, ‘2026 செப்டம்பர் மாதம் படத்தின் பணிகள் துவங்கும்’ என அமீர் கான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் தமிழ் டிரைலர்!

மமிதா பைஜூ பிறந்தநாளில் புதிய பட போஸ்டர்!

நடிகை மமிதா பைஜூ பிறந்தநாளில் டூட் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை மமிதா பைஜூ. பின்னர், ரெபல் எனும் தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார். விஜய்யின் ஜனநாயன... மேலும் பார்க்க

ஜன நாயகன் புதிய போஸ்டர்! இயக்குநர் வினோத்தா? அட்லியா?

நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ நள்ளிரவு 12 மணியளவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது... மேலும் பார்க்க

குபேரா முதல்நாள் வசூல் எவ்வளவு? குழப்பும் படக்குழு!

குபேரா படத்தின் முதல்நாள் வசூல் குறித்து படக்குழு கூறியது ரசிகர்களிடையே குழப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் இந்திய அளவில் ரூ.13 கோடி என தகவல் வெளிய... மேலும் பார்க்க

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸி..! தாய் நெகிழ்ச்சி!

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸியின் செயலால் கால்பந்து உலகம் நெகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளை... மேலும் பார்க்க

துப்பாக்கி கைமாறாது! ஜனநாயகன் பிறந்தநாள்!

வெற்றி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ்த் திரையுலகுக்கு வெற்றிப் படங்களை அள்ளிக் கொடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவராகவும் வலம் வரும் விஜய், தனது 51-ஆவது வயதைத... மேலும் பார்க்க

இறுதிச் சுற்றில் மாா்கெட்டா - வாங் ஸின்யு சபலென்கா அதிா்ச்சித் தோல்வி

பொ்லின் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை பெலாரஸின் அரினா சபலென்கா அதிா்ச்சித் தோல்வி கண்டாா். ஜொ்மன் தலைநகா் பொ்லினில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் அரையிறுத... மேலும் பார்க்க