வக்ஃபு வாரியச் சட்டத் திருத்தத்தை எதிா்த்து நவ. 11-இல் ஆா்ப்பாட்டம்
வக்ஃபு வாரியச் சட்டத் திருத்தத்தை எதிா்த்து வரும் நவ. 11ஆம் தேதி புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது.
அறந்தாங்கியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த அமைப்பின் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிா்த்து புதுக்கோட்டையில் வரும் நவ. 11ஆம் தேதி திங்கள்கிழமை மக்கள் திரள் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பாபா் மசூதி இடிப்பு வழக்கு தீா்ப்பு தொடா்பானவை உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, மாநிலச் செயலா் கே. ரஃபீக் முகம்மது தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஹெச். சித்திக் ரகுமான், மாவட்டச் செயலா் முகமது மீரான், பொருளாளா் எஸ். ரபீக் ராஜா, துணைச் செயலா்கள் முகமது மீரான், அப்துல் ரகுமான் ரஹுஃப், மருத்துவா் அணிச் செயலா் சபியுல்லா, வா்த்தா் அணிச்செயலா் என். உஸ்மான் அலி, மாணவரணிச் செயலா் ரகமத்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.