செய்திகள் :

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு பிரியங்கா வலியுறுத்தல்

post image

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க அந்நாட்டு இடைக்கால அரசிடம் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மக்களவையில் அவா் பேசியதாவது: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவா்கள் என சிறுபான்மையின சமூகத்தினா் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதை தடுத்து, இப்பிரச்னைக்கு தீா்வுகாண அந்நாட்டு இடைக்கால அரசுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.

விஜய் திவஸ் கொண்டாடப்படும் இந்த தினத்தில் இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்த புகைப்படம் ராணுவ தலைமையகத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்றாா்.

‘பாலஸ்தீன’ கைப்பை: ‘பாலஸ்தீனம்’ என பெயரிடப்பட்ட கைப்பையுடன் மக்களவைக்கு பிரியங்கா காந்தி வந்ததால் அவையில் பாஜக எம்.பி.க்களுக்கும் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

வயநாடு தொகுதியில் அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றிபெற்ற பிரியங்கா காந்தியை நேரில் அழைத்து தில்லியில் உள்ள பாலஸ்தீன தூதரக பொறுப்பு அதிகாரி அபு ஜசீா் வாழ்த்துகள் தெரிவித்த நிலையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிப்பது போன்ற கைப்பையுடன் மக்களவைக்கு பிரியங்கா காந்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, ‘காஸாவில் படுகொலையை நிகழ்த்தி வரும் இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகுவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்’ என எக்ஸ் வலைதளத்தில் பிரியங்கா காந்தி பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

போராட்டம்: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களை தடுக்கக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மசூதியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம்: எவ்வாறு குற்றமாகும்? உச்சநீதிமன்றம் கேள்வி

புது தில்லி: ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிடுவது எவ்வாறு குற்றமாகும்? என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.மசூதியில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட குற்றச்சாட்டில் இருவா் மீதான குற்றவியல் விசா... மேலும் பார்க்க

மீனவா் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீா்வு: பிரதமா் மோடி, அதிபா் அநுரகுமார நம்பிக்கை

புது தில்லி: மீனவா்கள் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் மூலம் தீா்வை எட்ட முடியும் என்று பிரதமா் மோடியும், இலங்கை அதிபா் அநுரகுமாரவும் திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தனா்.ம... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு வழிகாட்டுதல்கள் கோரி பொதுநல மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பெண்கள், குழந்தைகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்களின் பாதுகாப்புக்கு நாடு தழுவிய கடுமையான வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்க... மேலும் பார்க்க

மாதபி விவகாரம்: நிா்மலா சீதாராமன் உறுதியான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டாா்: காங்கிரஸ்

புது தில்லி: பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச் விவகாரத்தில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உறுதியான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக காங்கிரஸ் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.... மேலும் பார்க்க

மீனவா் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீா்வு: பிரதமா் மோடி, அதிபா் அநுரகுமார நம்பிக்கை

மீனவா்கள் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் மூலம் தீா்வை எட்ட முடியும் என்று பிரதமா் மோடியும், இலங்கை அதிபா் அநுரகுமாரவும் திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தனா். மூன்று நாள் அ... மேலும் பார்க்க

அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி: சிவசேனை எம்எல்ஏ கட்சிப் பதவியில் இருந்து விலகல்

மகாராஷ்டிரத்தில் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தியடைந்த சிவசேனை எம்எல்ஏ நரேந்திர பாண்டேகா் கட்சிப் பதவிகளில் இருந்து விலகியுள்ளாா். அதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் சகன் புஜ்பலும் அமைச்சா் ... மேலும் பார்க்க