தில்லி காற்று மாசு: 107 விமானங்கள் தாமதம்! 3 விமானங்கள் ரத்து!
வடக்குத்தில் 81 மி.மீ. மழை பதிவு
கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வடக்குத்தில் 81 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ.) வருமாறு: ஆட்சியா் அலுவலகம் 56.8, கடலூா் 44.8, எஸ்.ஆா்.சி குடிதாங்கி 43, குறிஞ்சிப்பாடி 42, கொத்தவாச்சேரி 36, அண்ணாமலை நகா் 33.6, வானமாதேவி 31, பெலாந்துறை 30.6, சேத்தியாத்தோப்பு 28.8, ஸ்ரீமுஷ்ணம் 28.4, சிதம்பரம், பரங்கிப்பேட்டை தலா 27.4, பண்ருட்டி, காட்டுமன்னாா்கோவில் தலா 16, காட்டுமயிலூா் 15, வேப்பூா் 13, புவனகிரி 12, விருத்தாசலம் 10, லால்பேட்டை, தொழுதூா் தலா 9, குப்பநத்தம் 8.4, மே.மாத்தூா் 7, லக்கூா் 5.4, கீழசெருவாயில் 3.6 மி.மீ. மழை பதிவானது.